tamilnadu

img

வெள்ளித் திரையில் பொன்விழா - நடிப்பிலும் நடப்பிலும் நாயகி - சி.ஸ்ரீராமுலு

 5 வயதில் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கி திரைத்துறையில் பொன்விழா காணும் அவர், சுமார் 130 தென்னிந்திய திரைப்படங்களில் நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக நடித்த படங்கள் தனி. கதாநாயகியாக பல ‘ஹிட்’(வெற்றி) படங்களில் நடித்து பேரும் புகழும் பெற்றவர்.  திரைக்கதை எழுத்தாளர், பாடலாசிரியர், பின்னணி (டப்பிங்) குரல் கலைஞர், இயக்குநர், தொலைக்காட்சி தொகுப்பாளர் என பன்முகத்தன்மையுடன் இன்று வரைக்கும் ஆளுமை செலுத்தி வரும் அவர் திரைக் கலைஞர் ரோகிணி...

தெலுங்கு, தமிழ், கன்னடம் மொழிகளைத் தொடர்ந்து மலையாளத்தில் கால் பதித்தார். 1982 இல் ரகுவரன், நிழல்கள் ரவி இணைந்து மலையாளத்தில் நடித்த ‘காக்கா’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இந்தப் படத்திலும் ரோகினியின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. பெரும் வெற்றிக்கு பின்னர், 1996 ஆம் ஆண்டு ரகுவரனை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகன். சில காரணங்களால் 2004 ஆம் ஆண்டில் இருவரும் பிரிந்தனர். 

ஆரம்பகால வாழ்க்கை! 

15 டிசம்பர், 1969 ஆம் ஆண்டு ஒன்றுபட்ட ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகில் உள்ள அனாகப்பள்ளி என்னும் சிற்றூர்தான் ரோகிணியின் சொந்த ஊர். தந்தை ராவ் நாயுடு ஒரு பஞ்சாயத்து அதிகாரி. மற்ற குழந்தை களைப் போல தானும் படிக்க வேண்டும் என ஆசைப்பட்ட ரோகிணிக்கு, சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்க, பள்ளிக்குச் செல்ல முடியாத சூழல். மறுபக்கம், தாயார் சரஸ்வதி மரண மடைய, தபால் மூலம் பள்ளி படிப்பை முடித்தார். தெலுங்கு, தமிழ் இரண்டும் சரள மாக பேசவும் எழுதவும் கற்றுக் கொண்டார். 

திரைப்பயணம்....

ரோகிணியின் தந்தை சினிமாவில் நடிக்க விரும்பினார். இதற்காகவே சென்னைக்கும் குடிபெயர்ந்தார். இயக்குநர்கள், தயாரிப்பா ளர்கள் பலரையும் சந்தித்தும் அவரால் நடிக்க முடியாமல்போனது. ஆனால் மகளுக்கு குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 1975 ஆம் ஆண்டு சி.எஸ்.ராவ்  இயக்கத்தில் வெளியான ‘யசோதா கிருஷ்ணா’ என்ற தெலுங்கு படத்தில் நடித்த  ரோகிணிக்கு அப்போது வயது 5. முதல் படத்திலேயே விருது பெற்றார். இதனால் என்.டி. ராமராவ், நாகேஸ்வரராவ், ஜமுனா  என தெலுங்கு நட்சத்திரங்களுக்கு பிடித்த மான குழந்தையாக மாறினார். தொடர்ந்து 150-க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நடிப்பில் அசத்தினார். 

வாழ்வு தந்த ‘பசி’ !

அதுவரை தெலுங்கில் மட்டுமே நடித்துக் கொண்டிருந்த பேபி ரோகிணி, தனது வாழ்க்கையை தொடங்கிய தமிழ் படம் என்றால்  அது 1975இல் வெளியான மேயர் மீனாட்சி.  சுமதி என்ற வாய் பேச முடியாத கதாபாத்தி ரத்தில் ஸ்ரீபிரியாவுக்கு தங்கையாக நடித்தார்.  இந்தப் படத்தின் வெற்றி, மேலும் வாய்ப்பு களை தேடி கொடுத்தது. 16 வயதினிலே, முள்ளும் மலரும் படங்கள் பெரும் பாராட்டை  பெற்றது. 1985 ஆம் ஆண்டு தமிழில் வெளியான  ‘அண்ணி’ படத்தில் கதாநாயகியாக அறிமுகம்  கொடுத்தார். பாலுமகேந்திராவின் ‘மறுபடியும்’ படமே  இவரது நடிப்பை பேச வைத்தது. ‘மகளிர் மட்டும்’ படத்தில் முழு திறமையை வெளிப் படுத்தினர். விருமாண்டி, ஐயா, தாமிரபரணி போன்ற படங்களில் முத்திரை பதித்தார்.  1987  இல் வெளிவந்த ‘பசி ‘ திரைப்படம் ரோகிணி யின் பன்முகத்தன்மையை முழுமையாக வெளிக்கொண்டு வந்தது. அதன் தொடர்ச்சி யாக தமிழில் சின்ன பூவே மெல்ல பேசு, தெலுங்கில் இடி கதா காடு படங்கள் அவரது கதாபாத்திரத்தை திரைக்கு வெளியில் பேச வைத்தன.  9 ரூபாய் நோட்டு, வாமணன், புரியாத புதிர்,  வேலைக்காரன், நாட்டாமை, தங்க மீன்கள், கோலி சோடா-2, டிராபிக் ராமசாமி, பலே வெள்ளையத் தேவா, விட்னஸ் என பல படங்களில் தனது யதார்த்தமான நடிப்பில் வெளிக்கொண்டு வந்தார்.

மலையாளத்தில்....

தெலுங்கு, தமிழ், கன்னடம் மொழிகளைத் தொடர்ந்து மலையாளத்தில் கால் பதித்தார். 1982 இல் ரகுவரன், நிழல்கள் ரவி இணைந்து மலையாளத்தில் நடித்த ‘காக்கா’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இந்தப் படத்திலும் ரோகினியின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. பெரும் வெற்றிக்கு பின்னர், 1996 ஆம் ஆண்டு ரகுவரனை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகன். சில காரணங்களால் 2004 ஆம் ஆண்டில் இருவரும் பிரிந்தனர். 

விருதுகள்! 

தனது சிறந்த நடிப்புக்காக பல விருது களை பெற்றுள்ளார். அவற்றுள், 2004 ஆண்டு  தமிழ்நாடு அரசின் கலைமாமணி, 1995 ஆம் ஆண்டு ‘ஸ்திரி’ தெலுங்கு படத்தின் சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் அவரது திரை  வாழ்வின் திருப்பு முனையாகும்.  அவரது சிறந்த நடிப்புக்காக ஸ்திரி, இடி கதா காடு படங்களுக்கான நந்தி விருது, வனிதா  திரைப்பட விருது, சிபிசி வழங்கிய சிறந்த  துணை நடிகைக்கான விருதும் வழங்கப் பட்டது. 

திரைக்குப் பின்னால்! 

தென்னிந்திய திரையுலகில் பல்துறை வித்தகரான ரோகிணி, ஏராளமான தமிழ் படங்க ளில் பிரபலமான நட்சத்திரங்களுக்கு டப்பிங் (பின்னணி குரல்) கொடுத்தவர்களில் ஒருவர்.  மணிரத்னம் இயக்கத்தில் ஐந்து திரைப்படங்க ளில் ஆறு கதாபாத்திரங்களுக்கு டப்பிங் கொடுத்தவர் இவர்.  திரைப்பட உலகில் முன்னணி கதாநாயகி களாக வலம் வந்த ரேவதி, ரோஜா, கௌதமி,  அமலா, ரம்பா, ஜோதிகா, மனிஷா கொய்ராலா,  ஐஸ்வர்யா ராய், நந்திதா தாஸ், மீரா ஜாஸ்மின்,  தபு, கீர்த்தி ரெட்டி, ஷில்பா ஷெட்டி, சோபனா,  பூஜா பட், நிரோஷா, ரஞ்சிதா, ஊர்மிளா, மோகினி  என பலருக்கும் பின்னணி குரல் கொடுத்தவர் ரோகிணி.

பன்முகத்தன்மை...

தமிழில் ‘அப்பாவின் மீசை’ என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குநரானார். ஆனால் இதற்கு முன்பே, குழந்தைகளை பற்றி 50 நிமிட ‘சைலண்ட் ஹியூஸ்’ என்ற  ஆவணப்படத்தை இயக்கி அவர் நடித்துள் ளார். எய்ட்ஸ் விழிப்புணர்வு உள்ளிட்ட பல குறும்படங்களையும் இயக்கியிருக்கிறார்.  பல படங்களுக்கு பாடல்களை எழுதிய ரோகிணி, கவுதம் மேனன் இயக்கத்தில் சரத்குமார் நடித்த பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தில் ‘உனக்குள்ளே நானே’ என்ற பாடலை எழுதியதுடன் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடியுள்ளார்.  விஜய் நடிப்பில் வெளிவந்த வில்லு படத்தில் ‘ஜல்சா’ என ஆரம்பிக்கும் பாடலை  எழுதிய அவர், மாலை பொழுதின் மயக்கத்திலே என்ற படத்தின் அனைத்து பாடல்களையும் எழுதி உள்ளார். சின்ன வாத்தியார் திரைப்படத்தில் ‘கண்மணியே கண்மணியே’ என்ற பாடலை பாடும் நிலா எஸ்பிபி உடன் இணைந்து பாடினார்

சினிமாவையும் தாண்டிய பயணம் ‌..

சமூகத்தின் மீதான அவரது அக்கறையும், தேடலும் மாபெரும் இயக்கமாக செயல்பட்டு கொண்டிருக்கும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்து டன் இணைத்து வைத்தது. சாதியற்ற தமிழகம், காவியற்ற தமிழகம், சமத்துவ மான சமூகம் உருவாக்க  கலை-இலக்கிய மேடைகளில் தோன்றிய அவர், சங்கத்தின் மாநிலத் தலைவர்களில் ஒருவரானார். சமூகத்தில் நிலவும் குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் 90 விழுக்காடு பெண்களுக்கு நீதி கிடைக்க மாதர் சங்கம் நடத்திய போராட்டங்களில், பாதிக்கப்பட்டதில் தானும் ஒருவர் என்ற முறையில் பங்கேற்று பெண்ணியம் பற்றி உள்ளதை உள்ளபடி பேசி பலரது பாராட்டையும் பெற்றார்.  செம்பரம்பாக்கம் ஏரி இரவோடு இரவாக திறக்கப்பட்ட போது வெள்ளத்தில்  தத்தளித்த சென்னை மாநகர மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தோழர்களுடன் களத்தில்  இறங்கினார்.  மக்கள் ஜனநாயக புரட்சியின் மூலம் இந்தியாவில் சமூக மாற்றத்தை கொண்டு வர போராடிக் கொண்டு வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பா ளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் களமிறங்கினார். அந்தக் கட்சி யின் அகில இந்திய மாநாடு வரவேற்பு குழு புரவலர்களில் ஒருவராகவும் இடம்பெற்றுள்ளார்.