tamilnadu

img

100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பறிப்பதா? மோடி அரசே, ‘விபி ஜி ராம் ஜி’ சட்டத்தைத் திரும்பப் பெறு!

100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பறிப்பதா? மோடி அரசே, ‘விபி ஜி ராம் ஜி’ சட்டத்தைத் திரும்பப் பெறு!

சென்னை, டிச. 24 - மகாத்மா காந்தியடிகளின் பெயரை நீக்கி யும், 100 நாள் வேலைத் திட்டத்தையே ஒழித்துக் கட்டும் வகையிலும், ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்துள்ள ‘விபி ஜி ராம் ஜி’ சட்ட முன்வடிவைக் கண்டித்தும், அதனைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், மோடி அரசின் சட்டத்தை ஆதரித்து, தமிழக உழைக்கும் மக்களுக்கு துரோகம் செய்யும் அதிமுகவைக் கண்டித்தும், தமிழ்நாடு முழுவதும் 400 இடங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.  திமுக, திராவிடர் கழகம், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ம.தி.மு.க., வி.சி.க., ம.நீ.ம.,  ம.ம.க. முஸ்லிம் லீக், த.வா.க., கொ.ம.தே.க. உள்ளிட்ட கட்சிகளை உள்ளடக்கிய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் ஊராட்சி ஒன்றிய தலைநகரங்களில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டங்களில் பல்லா யிரக்கணக்கான மக்கள் பங்கேற்று, ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக கண்டனம் முழங்கினர். மகாத்மா காந்தியடிகள் பெயரை நீக்கி 100 நாள் வேலைத் திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தை கொண்டு வந்துள்ள ஒன்றிய பா.ஜ.க. அரசை யும் - ஒத்து ஊதும் அதிமுகவையும் கண்டித்து புதனன்று (டிச.24) தமிழ்நாடு முழுவதும் சுமார் 400 இடங்களில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை இதன் ஒருபகுதியாக சென்னை தெற்கு மாவட்டம் சார்பில் மேடவாக்கத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் அரசியல் தலைமை க்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன், கி. வீரமணி (தி.க.), மு. வீரபாண்டியன் (சி.பி.ஐ.), தொல். திருமாவளவன் (வி.சி.க.), வைகோ (ம.தி.மு.க), கே.வி. தங்கபாலு (காங்கிரஸ்), எம்.எச். ஜவாஹிருல்லா (மமக), காதர் மொகைதீன் (ஐயுஎம்எல்), தி. வேல்முருகன் (தவாக), ஈ.ஆர். ஈஸ்வரன் (கொமதேக), அருணாச்சலம் (மநீம), பொன். குமார் (தவிக), சுப. வீரபாண்டியன் (திஇதபே) உள்ளிட்டோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழச்சி தங்கபாண்டியன், கனிமொழி சோமு, சென்னை மாநகராட்சி துணை மேயர் மு. மகேஷ்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, பிரபாகரராஜா, காரம்பாக்கம் கணபதி, அரவிந்தரமேஷ் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மதுரை மதுரையில் முனிச்சாலை டி.எம்.எஸ். சிலை அருகில் திமுக மாநகர் மாவட்டச் செய லாளர் கோ. தளபதி எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பொன். முத்துராமலிங்கம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி. வேலுச்சாமி, முன்னாள் மேயர் பெ. குழந்தைவேலு, சிபிஎம் சார்பில் மாநிலக்குழு உறுப்பினர் இரா. விஜயராஜன், மா. கணேசன், மதிமுக சட்டமன்ற உறுப்பினர் மு.  பூமிநாதன், மாவட்டச் செயலாளர் எஸ். முனிய சாமி, சிபிஐ மாவட்ட துணைச் செயலாளர் வீரசிங்கம், காங்கிரஸ் தலைவர் வி. கார்த்தி கேயன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் ப. ரவிக்குமார், தீபம் சுடர்மொழி, மக்கள் நீதி மய்யம் நிர்வாகி அழகர் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி, ஆதித் தமிழர் பேரவை, ஆதித் தமிழர் கட்சி, தமிழ்ப்  புலிகள் கட்சி, எஸ்டிபிஐ உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.