tamilnadu

img

சைபர் தாக்குதல்களில் இந்தியா 2-ஆவது இடம்!

சைபர் தாக்குதல்களில் இந்தியா 2-ஆவது இடம்!

உலகளவில், 2024-ஆம் ஆண்டில் நிறுவனங்கள் சைபர் தாக்குதலுக்கு உள்ளான நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. சைபர் பாதுகாப்பு கண்காணிப்பு நிறுவனமான CloudSEK வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, 2024-ஆம்  ஆண்டில் அதிகபட்சமாக சைபர் தாக்குதலுக்கு உள்ளான  நிறுவனங்கள் கொண்ட நாடாக அமெரிக்கா உள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 140 நிறுவனங்கள் மீது சைபர் தாக்கு தல்கள் நடந்துள்ளன. இதனை தொடர்ந்து, 95 நிறுவ னங்கள் சைபர் தாக்குதலுக்கு உள்ளான இந்தியா, இரண்டாவது இடத்தில் உள்ளது. 57 நிறுவனங்கள் சைபர்  தாக்குதலுக்கு உள்ளான இஸ்ரேல் மூன்றாம் இடத்தில் உள்ளது. மேலும் இந்தியாவில் நடந்த சைபர் தாக்குதல்களில், நிதி மற்றும் வங்கித் துறைகளில் 20 பேரும், அரசுத்  துறைகளில் 13 பேரும், தொலைத்தொடர்பு துறையில்  12 பேரும், சுகாதாரம் மற்றும் மருந்துத் துறையில் 10 பேரும்,  கல்வித் துறைகளில் 9 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஹை-டெக் குழுமம், ஸ்டார் ஹெல்த் மற்றும் அலைட் இன்சூரன்ஸில் இருந்து இந்திய குடிமக்களின் 850 மில்லியன் தரவுகள் கசிவு, இந்திய தொலைத்தொடர்பு ஆலோசகர்களிடமிருந்து 2TB தரவுகள் கசிவு ஆகியவை முக்கிய சைபர் தாக்குதல்கள் ஆகும். இந்தியாவில் சைபர் தாக்குதல்கள் செய்து பணம் பறிக்கும் Ransomware-களில், Lockbit 20-க்கும் மேற்பட்ட  தாக்குதல்களும், Killsec 15-க்கும் மேற்பட்ட தாக்குதல்களும்,  Ransomhub 12-க்கும் மேற்பட்ட தாக்குதல்களும் நடத்தி யுள்ளன.

இந்த தகவல்களை ஏஐ சாட்பாட் உடன் நாம் பகிரக்கூடாது! 

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில், சாட்பாட்களின் திறன்களும் அதிகரித்துக் காணப்படுகிறது. சாட்ஜிபிடி, ஜெமினி உள்ளிட்ட ஏஐ சாட்பாட்கள் மனிதர்களுடன் உரையாடி  அவர்களுடைய பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது. இந்த  சாட்பாட்கள் பணிகளை விரைவாக முடிப்பதற்கு உதவியாக இருக்கின்றன. ஆனாலும், ஏஐ சாட்பாட் உடன் பகிரக்கூடாத சில  தகவல்கள் உள்ளன. ஏனென்றால், ஏஐ சாட்பாட்கள் உங்கள் தனியுரி மையை ஆபத்தில் ஆழ்த்தலாம். சாட்பாட்டுடன் பகிரப்பட்ட தரவுகள் சர்வர்களில் சேமிக்கப்படுகிறது. ஒரே வேளை, சர்வர்களில் ஹேக்கர்கள் ஊடுருவினால், உங்கள் தனிப்பட்ட தகவல் திருடப்பட வாய்ப்புள்ளது. ஏஐ சாட்பாட் உடன் பகிரக்கூடாத தகவல்கள் என்னென்ன என்று பார்ப்போம்: பெயர், முகவரி, செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி போன்ற தனிப்பட்ட தகவல்களைப் பகிரக்கூடாது. வங்கிக் கணக்கு விவரங்கள், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு விவரங்கள், ஆதார் எண் ஆகியவற்றைப் பகிரக்கூடாது. அலுவலகத்தின் பாதுகாக்கப்பட்ட தகவல்கள், பாஸ்வேர்டுகள் ஆகியவற்றைப் பகிரக் கூடாது. நாம் சாட்போட்களுடன் உரையா டும்பொழுது, இதுபோன்ற தனிப்பட்ட தகவல்கள் பகிர்வதை தவிர்த்தால், நாம் பாதுகாப்பாக இருக்க முடியும்.