tamilnadu

கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

குமரி,டிச.8- உலகப் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் கன்னியாகு மரியும் ஒன்று. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு வருடம் முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து சென்றாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் சுற்றுலா பயணிகளின் வருகை வழக்கத்தைவிட அதிகமாக காணப்படும். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை அடியோடு நின்று போய் விட்டது. தற்போது கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்க ப்பட்டு உள்ளதைத் தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு விமான போக்குவரத்து தொடங்கப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகளும் இந்தியாவுக்கு வரத் தொடங்கி உள்ளனர். அந்த அடிப்படையில் இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணி கள் வர தொடங்கி உள்ளனர்.