சென்னை, ஜூலை 12- தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் விளை யாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 90 வீரர் களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணை யத்தின் சார்பில் ரூ.5.97 கோடிக்கான ஊக்கத் தொகை யை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற சதுரங்கப் போட்டி யில் சர்வதேச மாஸ்டர் பட்டம் வென்ற சென்னையை சேர்ந்த எஸ். ரோஹித் கிருஷ்ணாவுக்கு ரூ. 3 லட்சம், ஸ்பெயின் நாட்டின், சாண்டாண்டரில் நடைபெற்ற ஜூனியர் பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டி யில் வெள்ளிப் பதக்கம் வென்ற சென்னை வீரர் எஸ். சங்கர் முத்துசாமிக்கு ரூ. 4 லட்சம், ஆந்திரப் பிரதேசத்தில் நடைபெற்ற 57-வது தேசிய ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கங்கள் வென்ற 21 விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத் தொகை யாக ரூ. 79 லட்சம். சப்-ஜூனியர், ஜூனியர் மற்றும் சீனியர் தேசிய அள விலான சாப்ட் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி களில் பதக்கங்கள் வென்ற 56 விளையாட்டு வீரர் களுக்கு ரூ. 2 கோடியே 5 லட்சத்து 75 ஆயிரம், டோக்கி யோவில் நடைபெற்ற பாரா பேட்மிண்டன் உலக சாம்பியன் ஷிப் போட்டியில் பதக்கங்கள் வென்ற 3 விளையாட்டு வீரர்களுக்கு ரூ. 2 கோடியே 55 லட்சம். புதுதில்லியில் நடைபெற்ற மகளிர் செஸ் சாம்பியன் ஷிப் போட்டியில் பதக்கங்கள் வென்ற 3 விளையாட்டு வீரர்களுக்கு ரூ. 15 லட்சம். மலே சியாவின் கோலாலம்பூரில் நடந்த 20-வது ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் ஆண்கள் குழு போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற வேலன் செந்தில்குமார், சவுரவ் கோசல் ஆகிய இருவருக்கும் தலா ரூ. 10 லட்சம், பெண்கள் குழு போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ஜோஷ்னா சின்னப்பா, சுனைனா குருவில்லா, அபராஜிதா பாலமுருகன் ஆகிய மூவ ருக்கும் தலா ரூ. 5 லட்சம் என மொத்தம் ரூ. 5 கோடியே 96 லட்சத்து 75 ஆயிரத்துக்கான காசோலையை 90 விளையாட்டு வீரர்களுக்கு வழங்கிடும் அடையாள மாக 9 பேருக்கு புதனன்று (ஜூலை 12) முதலமைச்சர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதய நிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பி னர் செயலர் மேகநாத ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.