tamilnadu

img

சிவப்புச் சூரியனுக்கு செவ்வணக்கம் செலுத்தினேன்

சிவப்புச் சூரியனுக்கு செவ்வணக்கம் செலுத்தினேன் மார்க்ஸ் நினைவிட அஞ்சலிக்குப் பின் முதல்வர் நெகிழ்ச்சி

சென்னை, செப். 6 - வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்துடன் ஜெர்மனி மற்றும் பிரிட்டன் பயணத்தில் ஈடு பட்டுள்ள தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லண்டனில் ஹைகேட் கல்லறைத் தோட்டத்தில் அமைந்துள்ள காரல் மார்க்ஸின் நினைவிடத்தைப் பார்வையிட்டு மரியாதை செலுத்தினார். இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர், “உழைக்கும் வர்க்கத் துக்கு ஒளி வழங்கிய சிவப்புச் சூரி யனாம் மாமேதை காரல்  மார்க்ஸ்   நினைவிடத்தில் செவ்வணக்கம் செலுத்தினேன்” என்று நெகிழ்ச்சி யுடன் குறிப்பிட்டுள்ளார். “தத்துவ ஞானிகள் இந்த உல கத்தை பல வழிகளிலும் வியாக்யா னம் செய்திருக்கிறார்கள். இங்கு பிரச்சனையோ, அதை மாற்ற வேண்டும் என்பது தான்” என்ற காரல் மார்க்சின் புகழ்பெற்ற வாக்கி யத்தையும் முதலமைச்சர் தமது பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அம்பேத்கர் இல்லத்தை பார்வையிட்ட முதலமைச்சர்  முன்னதாக, லண்டன் பொருளி யல் பள்ளியில் கல்வி பயின்ற காலத்தில் டாக்டர் பி.ஆர். அம்பேத் கர் தங்கியிருந்த இல்லத்தையும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் பார்வையிட்டார்.  அதுபற்றியும் சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ள மு.க. ஸ்டாலின், “இந்தியாவில் சாதியின் பேரால் ஒடுக்கப்பட்ட ஓர் இளைஞன், இங்குதான் தனது அறிவால் வளர்ந்து, லண்டனில் அனைவரது மரியாதை யையும் பெற்று, பின்னர் இந்தியாவின் அரசியலமைப்பையே வடித்துத் தரும் நிலைக்கு உயர்ந்தார்” என்று குறிப்பிட்டுள்ளார். பெரியார் - அம்பேத்கர் உரையாடல் புகைப்படம் குறிப்பாக, தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் உரையா டும் வரலாற்றுச் சிறப்புமிக்க புகைப் படத்தை அங்கு கண்டது மிகவும் சிலிர்ப்பூட்டியதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.  “இப்படியொரு உணர்வெழுச்சி மிகுந்த தருணம் வாய்க்கப் பெற்ற தற்காக மகிழ்ச்சி அடைகிறேன், ஜெய் பீம்” என்று கூறியுள்ளார்.