tamilnadu

img

வெள்ளம் - நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட 7 மாநிலங்கள்; தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்!

வெள்ளம் - நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட 7 மாநிலங்கள்; தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்

சிபிஎம் அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்

புதுதில்லி, செப். 6 - வெள்ளம் நிலச்சரிவால் பாதிக்கப் பட்ட மாநிலங்களை தேசியப் பேரிட ருக்கு உள்ளான மாநிலங்களாக அறி வித்து, போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக கட்சியின் அர சியல் தலைமைக்குழு வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறப் பட்டிருப்பதாவது: 7 மாநிலங்களில்  வெள்ளம் - நிலச்சரிவு வட இந்தியாவில் ஏற்பட்டுள்ள அசா தாரண வெள்ளம் மற்றும் நிலச்சரிவு நிலைமை குறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தன்  ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்திக் கொள்கிறது.  பஞ்சாப், இமாசலப்பிரதேசம், உத்தரகண்ட், ஜம்மு-காஷ்மீர், ஹரியானா, ராஜஸ்தான், தில்லி ஆகிய மாநிலங்கள் கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளன.  முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஏற்பட்டுள்ள பேரிடரில்  உயிரிழந்தவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்க லைத் தெரிவித்துக்கொள்கிறது. மிகவும் மோசமான  பாதிப்பில் பஞ்சாப்  பஞ்சாப் மாநிலம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் 23 மாவட்டங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளன. வெளிவந்துள்ள செய்தி களின்படி, மாநிலத்தின் 1655 கிரா மங்களில் சுமார் 3 லட்சம் ஏக்கர் பயிர்கள் பகுதியளவு அல்லது முழுமையாக நீரில் மூழ்கியுள்ளன. 4 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் நேரடியாக பாதிக்க ப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.  பலத்த மழையுடன்  பல அணைகளில் இருந்து வெளி யேற்றப்பட்ட உபரிநீர் காரணமாக பியாஸ், சட்லஜ், ரவி மற்றும் காகர்  ஆகிய அணைகள் நிரம்பி வழி கின்றன. இதன் விளைவாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் பயிர்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானாவில் 2.5 லட்சம்  ஏக்கரில் பயிர்கள் சேதம் ஹரியானாவில், 12 மாவட்டங் களில் 1,402 கிராமங்களில் பரவியுள்ள  சுமார் 2.5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிர்கள் முற்றிலுமாக அழிக்கப் பட்டுள்ளன. ஜம்மு-காஷ்மீரிலும், ஆயிரக் கணக்கான ஏக்கர் நிலத்தில் விளைந்த நெல் மழை மற்றும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. 170-க்கும் மேற்பட்டோர் இறந்ததாகக் கூறப்படுகிறது. ராஜஸ்தான் மற்றும் தில்லியின் சில பகுதிகளும் பரவலான சேதத்தை சந்தித்துள்ளன. ஜம்மு - காஷ்மீரில் பழத்தோட்டங்கள் நாசம் இமாசலப் பிரதேசத்தில் 320-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது உட்பட பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும்  பலர் காணாமல் போயுள்ளதாகக் கூறப் படுகிறது. பொது உள்கட்டமைப்பு, நிலம் மற்றும் வீடுகள், கால்நடைகள், பழ மரங்கள், விளைந்த பயிர்கள், வாக னங்கள் மற்றும் மாட்டுத் தொழு வங்கள் பெருமளவில் நாசமாகி யுள்ளன.  சிம்லா மற்றும் குல்லுவில் உள்ள ஆப்பிள் பழத்தோட்டங்கள் நாசமாகியுள்ளன. கிட்டத்தட்ட 25,000 ஏக்கர் தோட்டக்கலை நிலங்கள் சேத மடைந்துள்ளதாக அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.  பேரிடரைக் கையாள்வதில் ஒன்றிய அரசு தோல்வி உத்தரகண்ட் மாநிலமும் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் பலர் காணாமல் போயுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த மிகப்பெரிய பேரிடரை கையாள்வதில் பாஜக தலைமை யிலான ஒன்றிய அரசு தோல்வி யடைந்துள்ளது. எனவே, வட மாநிலங்களில் நடந்துள்ள பாதிப்பை தேசியப் பேரிடராக அறிவித்திட வேண்டும்; நிவாரணம் மற்றும் மறு வாழ்வு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள ப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோருகிறது.  பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவா ரணம் அளித்திடும் வேலைகளில் அனைத்து மாநிலங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சுறுசுறுப்பாக இறங்கியுள்ளனர். பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் உள்ள முன்னணி ஊழியர்கள் அனைவரும் இந்தப்பணியில் தங் களை உடனடியாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டுமென்றும் கட்சி  அறைகூவி அழைக்கிறது. பாதிக்கப் பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காக நிதி திரட்டுமாறும் கட்சி  அறைகூவல் விடுக்கிறது.  இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.    ந.நி.