தஞ்சாவூர், செப்.6 - முழு சந்திர கிரகணத்தையொட்டி செப்.7 (ஞாயிறன்று) தஞ்சாவூர் பெரிய கோவிலில் நடை சாத்தப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஞாயிறன்று, இரவு 9.55 மணிக்கு தொடங்கும் கிரகணம் செப்.8 ஆம் தேதி அதிகாலை 1.31 மணி வரை நீடிக்கிறது. சந்திர கிரகணத்தை முன்னிட்டு, தஞ்சாவூர் பெரிய கோவிலில் பிற்பகல் 3 மணி முதல் மாலை 4 மணிக்கு நடை மூடப்படுகிறது. மாலை 4 மணிக்கு மேல் பக்தர்களின் தரிசனத்துக்கு அனுமதி கிடையாது. செப்.8 ஆம் தேதி காலையில் 6 மணிக்கு சந்திர கிரகண பரிகாரம் பூஜைகள் செய்த பிறகு, நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.