தமிழக அரசுக்கு கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்
சிறுமிகள், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், அதற்கான எதிரான விழிப்பு ணர்வை ஏற்படுத்தும் வகையில், சட்டமன்றத் தில் சிறப்பு விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் வலி யுறுத்தியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டு வரைவு அறிக்கை தொடர்பாக புதனன்று திண்டுக்கல்லில் மதுரை மாநகர், புறநகர், திண்டுக்கல், தேனி, சிவகங்கை, விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களைச் சேர்ந்த முன்னணி ஊழியர்கள் பங்கேற்ற சிறப்புப் பேர வைக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த கே. பாலகிருஷ்ணன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பாலியல் வன்கொடுமைகள் குறித்து சட்டமன்றத்தில் விவாதம் தேவை
தமிழ்நாட்டில் பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் தினசரி நடக்கிறது. இதுவரை மாணவிகள் மீது, ஆசிரியர்கள் பாலியல் கொடுமைகள் செய்ததாக புகார்கள் வந்துள்ளன. ஆசிரியர்களே மாணவிகள் மீது இப்படி பாலியல் வன்கொடுமையில் ஈடு படுவதன் மூலம் சமூகம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்ற கேள்வி எழுகிறது. தினம் தினம் பாலியல் வன்கொடுமைகள், தொந்தரவுகள், பாலியல் கொலைகள் நடக் கின்றன. ரயிலில் போகும் பெண்களுக்கு பாது காப்பு இல்லை. ரோட்டில் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இது ஒரு சமூக பிரச் சனை. தமிழ்நாடு அரசு இதுதொடர்பாக தண்ட னைகளை அதிகரிக்க சிறப்புச் சட்டங்களைக் கொண்டு வந்துள்ளது. அதேபோல சமூகத் தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தைக் கூட்டி சிறப்பு விவாதம் நடத்த வேண்டும்.
ஆளுநர் உடனடியாக பதவி விலக வேண்டும்
தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களை கிடப்பில் போட்டது குறித்தும், காரணமே இல்லாமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது குறித்தும் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு உச்ச நீதிமன்றம் காட்டமான கேள்விகளை எழுப்பியுள்ளது. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதைத் தவிர, ஆளுநருக்கு வேறு வாய்ப்பை அரசிய லமைப்புச் சட்டம் வழங்கவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, அரசிய லமைப்புச் சட்டத்தை மீறி நடந்து கொள்ளும் ஆளுநர் ரவி உடனடியாக பதவி விலக வேண்டும்.
பஞ்சமி நிலத்தைப் பட்டா போட்ட ஓ.பி.எஸ். மீது நடவடிக்கை!
முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் பஞ்சமி நிலத்தை தன் பெயருக்கு கிரயம் வாங்கி, முறைகேடாக பட்டாவாக மாற்றி யிருக்கிறார் என்ற புகார் எஸ்.சி. - எஸ்.டி. ஆணையத்திற்கு வந்து விசாரித்த பிறகு அந்த பட்டாவை ஆணையம் ரத்து செய்துள்ளது. பஞ்சமி நிலம் ஓ. பன்னீர்செல்வம் பெயருக்கு எப்படி பட்டா போட்டுக் கொடுக்கப்பட்டது? இது மோசடியானது. எளிய தலித் மக்களுக்கு கொடுக்கப்பட்ட பஞ்சமி நிலத்தையெல்லாம், அரசியல் செல் வாக்கு உள்ளவர்கள் பினாமியாக வாங்கிக் கொண்டு பட்டா மாறுதல் செய்து கொள்கிற போக்கு உள்ளது. இது வன்மையான கண்ட னத்திற்குரியது. இதுபற்றி ஓ. பன்னீர்செல்வம் வாய்திறந்து பதில் சொல்லவில்லை. அவர் நிலத்தை அபகரித்தாரா அல்லது எஸ்.சி. - எஸ்.டி. ஆணையம் தவறாக சொல்கிறதா? எது உண்மை. ஓ. பன்னீர்செல்வம் பதில் சொல்ல வேண்டும். இதுபோன்று பட்டா மாறுதல் செய்யப் பட்டுள்ள பஞ்சமி நிலங்களைக் கண்டறிந்து, கைப்பற்றி- அவற்றைத் தலித் மக்களுக்கு வழங்க அரசு முன் வரவேண்டும்.
மதவாத சக்திகள் மீது நடவடிக்கை வேண்டும்
சமீபத்தில் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மற்றும் சிக்கந்தர் தர்காவை வைத்து, ஆர்.எஸ்.எஸ். பாஜக, இந்து முன்னணி கூட்டம் ஒரு பதற்றமான சூழலை ஏற்படுத்த முயன்றன. இதுபோன்ற மதவாத அமைப்புகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முன்வரவேண்டும். வேடிக்கை பார்க்கக் கூடாது. தமிழ்நாட்டில் மதமோதலை உருவாக்க நீண்டகாலமாக திட்டமிட்டு செயல்படுகின்றனர். இதை அனுமதிக்க முடியாது. அண்ணாமலை போன்றவர்கள் கோவில் கோவிலாக சென்று வருகிறார்கள். அவர்கள் மதத்தின் பேரால் அரசி யலில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்.
ஆம் ஆத்மி அரசு மீது மோடி அரசு படையெடுத்தது
பிரதமர் மோடி தில்லி தேர்தலில் வீதி வீதி யாகச் சென்று ஓட்டுக் கேட்டார். உள்துறை அமைச்சர் உள்ளிட்ட ஒட்டுமொத்த மோடி அரசாங்கமும் ஒரு அந்நிய நாட்டின் மீது படை எடுப்பதைப் போல சென்று தான் தில்லியைக் கைப்பற்றியிருக்கின்றனர். முன்னதாக, முதலமைச்சரையே கைது செய்து 7, 8 மாதம் சிறை வைத்தார்கள். ஏற்கெனவே தில்லி அரசாங்கத்தையே சுதந்திரமாக செயல்பட விடாமல் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் தான் வைத்திருந்தார்கள். இவ்வளவு பலப்பிர யோகத்தை, அதிகார பிரயோகத்தைச் செய்த பிறகும் கூட 2 விழுக்காடு தான் ஓட்டு வித்தியா சம். எனவே பாஜக பெரிய வெற்றி பெற்ற தாகவோ, ஆம் ஆத்மி படு தோல்வி அடைந்து விட்டதாகவோ சொல்ல முடியாது. தமிழ் நாட்டில் இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது. அதிமுக- தான் பலவாறாக பிரிந்து கிடக்கிறது. இந்தியா கூட்டணி ஒற்றுமையுடன் இருக்கிறது.
பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிகள் ஆக்குவதா?
வேங்கை வயல் பிரச்சனையில் பாதிக்கப் பட்ட தலித் மக்களைச் சேர்ந்த 3 பேர் குற்ற வாளி என்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப் பட்டுள்ளது. அதேபோல் கள்ளக்குறிச்சி மாவட் டம் கனியாமூர் மாணவி ஸ்ரீமதி மரணத் தையொட்டி நடந்த வன்முறை வழக்கில், மாண வியின் தாயாரையே சிபிசிஐடி காவல்துறை முதல் குற்றவாளியாக சேர்த்துள்ளது. தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் வழக்கை, கொலை வழக்காக மாற்றக் கோரி, அந்தத் தாய் இன்றுவரை நீதி மன்றத்திற்கு நடையாக நடந்து சட்டப் போ ராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்.
ஆனால், அவரையே கலவரத்தை தூண்டிவிட்டதாக சிபிசிஐடி காவல்துறை குற்றம் சாட்டுகிறது. கலவரம் தொடர்பாக ஏற்கெனவே நீதி மன்றத்தில் நீதிபதிகள் கேட்டபோது, மாணவி தரப்பு வழக்கறிஞர்கள் எங்களுக்கும் வழக்குக் கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறி யிருக்கின்றனர். நீதிபதிகளும் அதை ஏற்றுக்கொண்டு, ஆணையில் பதிவு செய்திருக் கின்றனர். அந்த ஆணையின் அடிப்படையில் தான் சிறப்புக் குழுவை அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. தற்போதோ, மாணவி ஸ்ரீமதியின் தாயாரையே முதல் குற்றவாளி யாக சேர்த்துள்ளனர். மாணவி கொலை செய்யப்பட்டார் என்பதை மூடி மறைக்க வேண்டும்.
தொடுக்கப்பட்டிருக்கும் வழக்கை நிர்மூலமாக்க வேண்டும். என்பது தான் நோக்க மாகத் தெரிகிறது. கலவரத்தில் ஈடுபட்டதாக 910 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் 47 பேர் சிறுவர்கள். இவர்கள் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். எனவே, சிபிசிஐடி தமது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் கூறினார். பேட்டியின் போது சிபிஎம் மாநிலச் செயற் குழு உறுப்பினர்கள் மதுக்கூர் இராமலிங்கம், கே. பாலபாரதி, என். பாண்டி, அர்ஜுணன், திண்டுக்கல் மாவட்டச்செயலாளர் கே.பிரபா கரன் ஆகியோர் உடனிருந்தனர்.