tamilnadu

img

அஞ்சலை அம்மாள் அறிவுலக நூலகத்திற்கு கடலூரில் அடிக்கல் நாட்டு விழா

அஞ்சலை அம்மாள் அறிவுலக நூலகத்திற்கு கடலூரில் அடிக்கல் நாட்டு விழா

கடலூர், பிப். 26- கடலூரில் ரூ. 110.26 கோடி மதிப்பீ ட்டில் அஞ்சலை அம்மாள் அறிவுலக நூலகம் கட்டப்படவுள்ளது. இதற்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினார். இதைத் தொடர்ந்து கடலூர் குண்டு சாலை பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ. ஐயப்பன், மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா ஆகியோர் மாதிரி நூலகக் கட்டட மாதிரியைப் பார்வையிட்டனர். மாவட்ட வருவாய் அலுவலர் கோ. புண்ணிய கோட்டி, பொதுப்பணித்துறைச் செயற்பொறியாளர் சிவசங்கரநாயகி, மாவட்ட நூலக அலுவலர் முருகன், மாமன்ற உறுப்பினர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.