தொடர் பருவ மழையால் குறுவை அறுவடை பாதிப்பு ஏக்கருக்கு நிவாரணம் ரூ.30,000 வழங்கிட திருவாரூர் ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை
திருவாரூர், அக். 21- வடகிழக்கு பருவமழை காரண மாக காவிரி டெல்டா மாவட்டங்களில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வரு கிறது. குறிப்பாக திருவாரூர் மாவட்டத் தில் குறுவை பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அறுவடை செய்ய முடியாத அளவிற்கு அழுகும் நிலையில் உள் ளது. எனவே ஏக்கருக்கு ரூ.30,000 நிவா ரணமாக வழங்கிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி. முருகையன், தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாவட்டச் செயலா ளர் எம். சேகர், மாவட்டத் தலைவர் எஸ். தம்புசாமி ஆகியோர் மாவட்ட ஆட்சியர் வ.மோகனச் சந்திரனை நேரில் சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் “இந்த ஆண்டு குறுவை சாகுபடி சுமார் 1 லட்சத்து 75 ஆயிரம் ஏக்கர் நடைபெற உள்ளது. இதில் சுமார் 1 லட்சத்து 10 ஆயிரம் ஏக்கர் அறுவடை செய்யப்பட்ட நிலை யில், இன்னும் சுமார் 65 ஆயிரம் ஏக்கர் அறுவடை நடைபெறாமல் உள்ளது. திருவாரூரில் வடகிழக்குப் பருவமழை துவங்கும் முன்பாகவே, கடந்த ஒரு வாரமாக தொடர்மழை பெய்து வருகிறது. மேலும், அறு வடை செய்த நெல் மணிகள் நேரடி கொள்முதல் நிலையத்தில் கொள் முதல் செய்யாமலும், தேக்க நிலை யிலும் உள்ளது. மிக முக்கியமாக விவ சாயிகள் அறுவடை செய்து கொண்டு வரும் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய முடியாத அவல நிலையும் நீடிக்கிறது. எனவே நேரடி கொள்முதல் நிலையத்தில் விவ சாயிகளிடமிருந்து கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை இருப்பு வைக்காமல் உடனடியாக லாரிகள் வாயிலாக குடோனுக்கு அனுப்பும் நட வடிக்கை வேண்டும். அதே போல குறிப்பிட்ட இடங்களில் தற்காலிக குடோன்கள் அமைக்கும் பணிகளை யும் விரைந்து மேற்கொள்ள வேண்டும். ஏக்கருக்கு ரூ.30,000 நிவாரணம் தீபாவளி பண்டிகை முன்பாக தொடங்கிய தொடர் மழையினால் அறு வடை செய்ய முடியாமல் மாவட்டத்தில் மீதமுள்ள சுமார் 65,000 ஏக்கரில் பயிர் செய்யப்பட்டுள்ள பயிர்கள் முற்றிலுமாக மழை நீரில் மூழ்கி பாதிப்படைந்துள்ளது. வட கிழக்கு பருவ மழையும் தொடங்கி கனமழையாக மாவட்டம் முழுவதும் பெய்து வருவதால் பாடுபட்டு விவ சாயம் செய்த நெல்மணிகளை அறு வடை செய்ய முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர். மழையில் சிக்கிய குறுவை நெற் பயிர்கள் சாய்ந்து முளைக்கத் தொடங்கி விட்டன. இனி வரும் நாட்களில் அறுவடை செய்தாலும் பெருத்த நஷ்டம் ஏற்படும் நிலை உள்ளது. ஆகவே, வருவாய் துறை யினர் மற்றும் வேளாண் துறை அலுவலர்கள், கள ஆய்வாளர்கள், வாயிலாக களஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட வயல்களுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 நிவாரணமாக வழங்க வேண்டும். உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
