நரிக்குடியில் விவசாயிகள் சங்கம் பிரச்சாரம்
திருச்சுழி, ஜன.29- வன விலங்கு பட்டியலில் இருந்து காட்டுப் பன்றிகளை அகற்ற வேண்டும். விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட் களுக்கு நியாயமான விலை கிடைக்க நட வடிக்கை எடுக்க வேண்டும். தங்கு தடை யின்றி பம்பு செட் விவசாயிகளுக்கு மின்சா ரம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிரச்சார இயக்கம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நரிக்குடியில்நடைபெற்ற இந்நிகழ்விற்கு வட்டச் செயலாளர் ஆர்.பெருமாள், ரா4 குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். டி. செல்வக்குமார் முன்னிலை வகித்தார். துவக்கி வைத்து மாவட்ட துணைத் தலை வர் கே.சுப்பாராஜ் பேசினார். மாவட்டச் செயலாளர் வி.முருகன் விளக்கிப் பேசி னார். எம்.அயூப்கான், ஜி.மார்க்கண்டன் உட்பட பலர் பங்கேற்றனர்.
