துளிர் திறனறிதல் தேர்வு 47 பள்ளி மாணவர்கள் பங்கேற்பு
மதுரை, ஜன.29- தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பள்ளி மாண வர்களின் அறிவியல் திறனை மேம்படுத்தும் நோக்கில் ஆண்டுதோறும் நடத்தி வரும் துளிர் திறனறிதல் தேர்வு இந்த ஆண்டு ஜனவரி 27 செவ்வாயன்று நடை பெற்றது. இதன் ஒரு பகுதியாக, மதுரையில் உள்ள விருது நகர் நாடார் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாண வர்கள் மொத்தம் 47 பேர் தேர்வில் பங்கேற்று எழுதி னர். இந்தத் தேர்வை அறிவி யல் ஆசிரியர் என்.விஜய குமார் ஏற்பாடு செய்திருந் தார். அவருக்கு உதவியாக அறிவியல் ஆசிரியர்கள் பி.நாகராஜன், எஸ்.பால ஐயப்பன், எம்.கணேண் குமார், ஆர்.ஜீவசூர்யா மற் றும் எஸ்.பத்மேஷ் ஆகி யோர் செயல்பட்டனர். மேலும் தமிழ்நாடு அறி வியல் இயக்கத்தின் மதுரை மாவட்ட பொருளாளர் ஆர்.வெண்ணிலா நிகழ்வில் கலந்து கொண்டு மாணவர் களை ஊக்குவித்தார்.
