tamilnadu

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 11 பேர் கைது

கோவை, ஜன.29- மேட்டுப்பாளையம் அருகே அன்னூரில் சட்டவிரோத மாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 11 பேரை காவல் துறையினர் கைது செய்து, வங்கதேச அகதிகள் முகாமில் ஒப்படைத்தனர். கோவை மாவட்டம், அன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்படும் தனியார் நூற்பாலைகள் மற்றும் பனியன் கம்பெனிகளுக்கு வட மாநில தொழிலாளர்கள் பணி யமர்த்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் இங்கு சட்டவிரோத மாக வங்கதேசத்தைச் சேர்ந்த சிலர் தங்கி இருப்பதாக கோவை கியூ பிரிவு போலீசருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் அன்னூர் போலீசார் மற்றும்  கியூ பிரிவு போலீசார் அன்னூர் பகுதியில் சோதனை நடத்தி னர். அப்போது வட மாநில தொழிலாளிகள் தங்கி இருந்த அறைகளில் சோதனை நடத்தி ஆவணங்களை சோதனை செய்தனர். அப்போது எந்தவித ஆவணங்களும் இன்றி சட்ட விரோத மாக தங்கி இருந்த வங்கதேசத்தை சேர்ந்த 11 பேரை கண்ட றிந்து அவர்களை கைது செய்து காவல்நிலையம் அழைத்து  வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அன்னூர் பகுதி யில் உள்ள தனியார் ஆலை ஒன்றுக்கு வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக நான்கு நாட்களுக்கு முன்பு  அழைத்து வரப்பட்டது தெரியவந்தது. இவர்கள் அனைவரை யும் அழைத்து வந்த ஏஜென்ட்கள் யார்? என்பதை குறித்து  மேல்விசாரணை நடைபெற்று வரும் வகையில் கைது செய்யப்பட்ட 11 பேரும் சேலத்தில் உள்ள வங்கதேச அகதி கள் முகாமில் ஒப்படைத்தனர்.

பாதாள சாக்கடை திட்டப்பணிகள் சேலம் மாமன்ற கூட்டத்தில் விவாதம்

சேலம், ஜன.29- சேலம் மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் முழுமையாக நடைபெறவில்லை என மாமன்ற கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டினர். சேலம் மாநகராட்சியின் இயல்பு கூட்டம் வியாழனன்று மேயர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் நகரில் உள்ள 60 வார்டுகளிலும் நடைபெறும் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் முழுமையாக நடைபெற வில்லை. சிறப்பு திட்டங்கள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகள் முழுமையாக எந்த வார்டு பகுதிகளிலும் செயல்படவில்லை என மாநகராட்சி எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டினர்.

பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி துவக்கம்

ஈரோடு, ஜன.29- பெருந்துறையில் பொது கழிவுநீர் சுத்தி கரிப்பு நிலையம் அமைக்கும் பணி தற்போது துவக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சு.முத்து சாமி தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்காட் வளாகத்தில் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு வருவதை, விரிவு படுத்துவது தொடர்பான ஆய்வுக்கூட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் புதனன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தலைமை வகித்து, தமிழக வீட்டு வசதித்துறை அமைச் சர் சு.முத்துசாமி பேசுகையில், பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டையில் 2000 கேஎல்டி கொள்ளளவு கொண்ட ஜீரோ திரவ வெளி யேற்றம் அடிப்படையிலான பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், ரூ.136.76 கோடி மதிப் பில் அமைக்கும் பணி, கடந்த 2025 ஜூன் 9 ஆம் தேதி அட்வன்ட் ஆக்ஸ்சாரா என்ற நிறுவனத் துக்கு ஒப்படைக்கப்பட்டது. மேற்கண்ட திட் டத்துக்கான அனுமதி, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மூலமாக, கடந்த 2025 டிச.23 ஆம் அன்று வழங்கப்பட்டு, பணிகள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டது. தொடர்ந்து, ஜன.27 ஆம் தேதி சிவில் வடிவ மைப்பு ஒப்புதல் வழங்கப்பட்டு, தற்போது பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இத்திட் டம், ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட காலக் கெடுவுக்குள் நிறைவு செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது, என்றார். இக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி, சட்டமன்ற உறுப்பினர் வி.சி.சந்திரகுமார் மற் றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

வேன் மீது லாரி மோதியதில் 2 பேர் பலி

தருமபுரி, ஜன.29- தருமபுரி அருகே சுற்றுலா வேன் மீது  லாரி மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த னர். படுகாயமடைந்த 3 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே உள்ள பழைய மாங்காடு பகுதியை  சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி சாவித்திரி (53) மற்றும் குடும்ப உறவினர் களான 7 குழந்தைகள், 9 பெண்கள், 8 ஆண் கள் உட்பட 24 பேர் புதனன்று இரவு ராணிப் பேட்டை மாவட்டத்திலிருந்து சேலம் மாவட் டம், கொண்டாலம்பட்டி அருகே உள்ள குல தெய்வ கோவிலுக்கு சுற்றுலா வேனில் சென் றுள்ளனர். வாகனத்தை லட்சுமிபதி (எ) கும ரேசன் என்பவர் இயக்கியுள்ளார். இந்நிலை யில், வியாழனன்று விடியற்காலை கிருஷ்ண கிரி - சேலம் தேசிய நெடுஞ்சாலை, புதிய நீதிமன்ற வளாகம் எதிரே இயற்கை உபா தைககை கழிப்பதற்காக வாகனத்தை ஓரத் தில் நிறுத்தியபோது, பின்னால் காட்டன் துணி பாரம் ஏற்றி வந்த லாரி மோதியதில், வேன்  கவிழ்ந்தது. இவ்விபத்தில் வேனில் இருந்த ஓட்டுநர் குமரேசன், சாவித்திரி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் தருண் (15), கண்ணு (42), மாதிரை (39) ஆகி யோர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தக வலறிந்து வந்த அதியமான் கோட்டை காவல் துறையினர் சடலங்களை மீட்டு பிரேத பரி சோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத் தனர். மேலும், படுகாயமடைந்தவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அதியமான் கோட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பழங்குடியினர் அருங்காட்சியத்திற்கு வரவேற்பு!

உதகை, ஜன.29- உதகை தாவரவியல் பூங்காவில் பழங் குடியினரின் அருங்காட்சியகம் அமைக்கப் பட்டிருப்பது வரவேற்பைப் பெற்றுள்ளது. நீலகிரி மாவட்டம், உதகைக்கு வரும்  சுற்றுலாப் பயணிகள், மாவட்டத்திலுள்ள  பழங்குடியின மக்கள் குறித்து தெரிந்து கொள்ளும் வகையில் தாவரவியல் பூங்கா வின் நுழைவுவாயில் புதுப்பிக்கப்பட்டு, அங்கு பழங்குடியினரின் வாழ்வியல் முறை குறித்த புகைப்பட அருங்காட்சியகம் அமைக் கப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் காலத்திலான பழமையான பாரம்பரிய கட்டடத்தில் தாவர வியல் பூங்கா குறித்த சிறப்பம்சங்கள், பழங் குடியினர் உட்பட நீலகிரி மாவட்டத்தின் சிறப் பம்சங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.  மேலும், பழங்குடியின மக்களின் புகைப்படங் கள் மற்றும் சிலைகளை அமைத்து, மாவட்டத் திலுள்ள பழங்குடியினர் குறித்து அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது  சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களி டையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

6.140 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்

கோவை, ஜன.29- தமிழ்நாடு - கேரளா எல் லையான வாளையாறு, வேலந்தாவளம் உள்ளிட்ட சோதனைச் சாவடிகள் வழி யாக அவ்வப்போது ஹவாலா பணம் மற்றும் சட்டவிரோத மாக தங்கம் கடத்தப்படுகி றது. இந்நிலையில், வியாழ னன்று  கோவைக்கு தங்கம்  கடத்தப்படுவதாக கே.ஜி  சாவடி போலீசாருக்கு தக வல் கிடைத்தது. அதன்பே ரில் போலீசார் வாளை யாறு எல்லையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பாலக்காட்டில் இருந்து கோவை நோக்கி  வந்த அரசு பேருந்தை  நிறுத்தி, பயணிகளிடம் போலீசார் சோதனையிட்ட னர். அப்போது பயணி ஒரு வர் வைத்திருந்த கைப்பை யில் தங்கக் கட்டிகள் இருந் தது தெரியவந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால் பயணியை பிடித்து விசா ரணை மேற்கொண்டனர். அதில், அவர் எர்ணாகுளத்தை சேர்ந்த நிபின் (29), என்பதும்,  கேரளாவிலிருந்து 6.140  கிலோ தங்கக்கட்டிகளை எடுத்து வந்ததும் தெரியவந் தது. தொடர்ந்து, அவற்றை பறிமுதல் செய்த போலீசார், அதனை வருமான வரித் துறை அதிகாரிகளிடம் ஒப்ப டைத்தனர்.

வாலிபர் சங்க போராட்ட அறிவிப்பால், பாலியல் குற்றவாளிகள் இருவர் கைது

தருமபுரி, ஜன.29- வாலிபர் சங்க போராட்ட அறி விப்பை தொடர்ந்து, சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த 2 பேரை  காவல் துறையினர் கைது செய்துள்ள னர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே 16 வயது சிறுமியை கடத்தி, சவுளூர் கிராமத்தை சேர்ந்த பெரியண் ணன் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இவருக்கு உடந்தை யாக இருந்த கோகுல் ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்ய  மறுத்து, அவனை தப்பிக்க விட்ட பாலக் கோடு காவல்துறையை கண்டித்தும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாதுகாப்பும், நிவாரணமும் வழங்கக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் வியா ழனன்று (நேற்று) பாலக்கோடு பேருந்து  நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்து வதாக அறிவித்தனர். இந்நிலையில், வியாழனன்று காலை பென்னாகரம் காவல் மாவட்ட துணை கண்காணிப்பா ளர் ராஜசுந்தரம், வாலிபர் சங்கத்தின்  மாவட்டச் செயலாளர் பி.கோவிந்த சாமி, மாவட்ட துணைச்செயலாளர் ரவி, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.முத்து ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது குற்றவாளிகளை போக்சோ சட்டத்தின்  கீழ் உடனடியாக கைது செய்வதாக  உறுதியளித்தனர். அதன்பேரில் போராட் டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், சிறுமியை பாலியல் வன் கொடுமை செய்த பெரியண்ணன் மற் றும் அவருக்கு உடந்தையாக இருந்த கோகுல் ஆகியோரை பாலக்கோடு மக ளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.