tamilnadu

img

பொதுப்பணித்துறை பணியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

பொதுப்பணித்துறை பணியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

மதுரை, ஜன.29- தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறை கணக்கு மற்றும் ஆட்சிப்பணியாளர் சங்கம்  சார்பில், பொதுப்பணித்துறை மற்றும்  நீர்வளத்துறை நிர்வாகத்தின் பணியாளர்  விரோத நடவடிக்கைகளை கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி யும் வியாழக்கிழமை கவன ஈர்ப்பு ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. மதுரை தல்லாகுளம் பென்னிகுயிக் வளாகத்தில் அமைந்துள்ள பொதுப் பணித்துறை அலுவலக வளாகத்தில், மதிய  உணவு இடைவேளையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர்கள் ஒ.மணி கண்டன், அ.ராஜாங்கம், ப.செல்வக்குமார், நா.திருமுருகன், இரா.பன்னீர்செல்வம், சி. சேதுராமபாண்டியன் ஆகியோர் தலைமை யேற்றனர். மாவட்டத் தலைவர் இரா.சிவக்குமார் தொடக்கவுரை ஆற்றினார். மாநிலத் தலை வர் ஆ.செல்வம் கோரிக்கை விளக்கவுரை ஆற்றினார். மாநில பொதுச் செயலாளர் கோ.கோமதிநாயகம் மற்றும் மாவட்டச் செயலாளர் இரா.ராஜா ஆகியோர் உரை யாற்றினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் க.நீதிராஜா, மாவட்டச் செயலா ளர் க.சந்திரபோஸ், மாவட்ட பொருளாளர் ஆ.பரமசிவன், வட்டக் கிளைத் தலைவர் சு.பாண்டிச்செல்வி, மாவட்ட இணைச் செய லாளர் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கி னர். மாவட்டப் பொருளாளர் பெ.அசோக் ராஜா நன்றி கூறினார்.