பழனியில் தமுஎகச சமூக நல்லிணக்க கருத்தரங்கம்
பழனி, ஜன.29- திண்டுக்கல் மாவட்டம் பழனி கணக்கன்பட்டியில் மகாத்மா காந்தி நினைவு சமூகநல்லிணக்க கருத்த ரங்கம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலை ஞர்கள் சங்கத்தின் சார்பாக நடைபெற்றது. வழக்கறிஞர் பால்சாமி தலைமை வகித்தார். ரவிச்சந்தி ரன் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் கவிஞர் தாமு, மாநில குழு உறுப்பினர் ராஜேந்திரன், மாவட்ட பொரு ளாளர் கா.பழனிக்குமார், மாவட்ட இணைச்செயலர்கள் ஆ.வைத்திலிங்க பூபதி, பேரா. சேது ராமலிங்கம், கிளைத் தலைவர் மீனாசுந்தர் ஆகியோர் பல்வேறு தலைப்பு களில் கருத்துரை நிகழ்த்தினர். ஆயக்குடி விஜயகுமார் குழுவினர் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.
