6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் காத்திருப்புப் போராட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூர், ஜன.29- ஆறு அம்சக் கோரிக்கை களை வலியுறுத்தி, கிராம நிர் வாக அலுவலர்கள் சங்கம் மாநிலம் முழுவதும் தொடர் காத்திருப்புப் போராட்டத் தில் ஈடுபட்டு வருவதால், அரசு அலுவலகப் பணிகள் முடங்கியுள்ளன. கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களை கழிப் பறை, குடிநீர் மற்றும் இணை ய வசதிகளுடன் நவீனமய மாக்க வேண்டும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வா ணையம் மூலம் நேரடி தேர்வு செய்யும் போது கல்வித் தகு தியை பட்டப்படிப்பாக மாற்ற வேண்டும், 10 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு தேர்வு நிலை கிராம நிர்வாக அலுவலராகவும், 20 ஆண்டு கள் பணி முடித்தவர்களுக்கு சிறப்பு நிலை கிராம நிர்வாக அலுவலராகவும் பணி உயர்வு வழங்க வேண்டும், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, புதன்கிழமை விருதுநகர் மாவட்டம் முழுவதும் கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக தென் மாவட் டங்களில் வயல் அறுவடைப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், விவசாயிகள் தங்கள் வயல்களில் விளை ந்த நெல்லை அரசு நேரடி கொள்முதல் நிலையங்க ளில் விற்பனை செய்ய, பயிர் எடுப்பு அடங்கல் சான்றி தழ்கள் பெற கிராம நிர்வாக அலுவலர்களை அணுக வேண்டிய கட்டாயம் உள் ளது. ஆனால், தற்போது கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டி ருப்பதால், அரசு நெல் கொள் முதல் நிலையங்களில் கொள்முதல் பணிகள் கடு மையாக பாதிக்கப்பட்டுள்ள தாக தெரிவிக்கப்படுகிறது. எனவே, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராம நிர் வாக அலுவலர்களை அரசு பேச்சுவார்த்தைக்கு அழை த்து, அவர்களின் கோரிக்கை களுக்கு தீர்வு காண வேண் டும் என விவசாயிகள் மற் றும் பொதுமக்கள் வலி யுறுத்தியுள்ளனர்.
