மதுரை பெருந்திரள் போராட்டத்தை விளக்கி இராமநாதபுரத்தில் விவசாயிகள் பிரச்சாரம்
இராமநாதபுரம், ஜன.29- இராமநாதபுரத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை நீக்கியதை கண் டித்து தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பில் பிப்ரவரி 4ம் தேதி மதுரையில் பெருந்திரள் போராட்டம் நடைபெறுகிறது. அதனையொட்டி வியாழ னன்று இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டம் வாகைகுளத்தில் துவங்கி டி.எம்.கோட்டை, சாயல் குடி, மாரியூர், வாலிநோக் கம், சிக்கல், சவேரியார் பட்டினம், இதம்பாடல், கீழக் கரை வட்டத்தில் பனையேந் தல், கொம்பூதி மேலமடை, சுமைதாங்கி, களரி, எக்குடி, நல்லாங்குடி, திருஉத்திர கோசமங்கை, பரமக்குடி வட் டத்தில் சத்திரக்குடி, மஞ்சூர், அரியனேந்தல், மேலக்காவ னூர், விளத்தூர், நெடுங் குளம், ஊரக்குடி, பார்த்தி பனூர், கமுதி வட்டத்தில் அபி ராமம், கமுதி, பேரையூர், முதுகுளத்தூர் வட்டத்தில் முதுகுளத்தூர் நகர், தேரி ருவேலி ஆகிய கிராம பகுதி களில் விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் வி. மயில்வாகணன் தலைமை யில் பிரச்சாரம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் எம். முத்துராமு, மாற்றுத்திற னாளி சங்க மாவட்டச் செய லாளர் எம்.ராஜ்குமார், விவ சாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் கே. கணேசன், மாவட்ட குழு உறுப்பினர் வி.முருகன், மாவட்டத் துணைத் தலைவர் டி.நவநீதகிருஷ்ணன், மாவ ட்ட குழு உறுப்பினர் பாலு, பரமக்குடி தாலுகா செயலா ளர் முருகேசன், தமுஎகச கமுதி தாலுகா செயலா ளர் கண்ணதாசன், சிபிஎம் பரமக்குடி வட்டாரக்குழு செயலாளர் இ.க.தட்சிணா மூர்த்தி, கடலாடி கிழக்கு தாலுகா தலைவர் எஸ்.ராம சாமி, செயலாளர் எம்.சுப்பிர மணியன், கடலாடி மேற்கு தாலுகா செயலாளர் எஸ்.சிவன் பெருமாள், துணைச் செயலாளர் வி.பெரியசாமி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத் துணைச் செயலா ளர் ஆர்.பெருமாள், வாலி பர் சங்க நிர்வாகி எஸ். டேவிட் ராஜா, விவசாய சங்க நிர்வாகி ஏ.மலை கிருஷ்ணன், ஆதித்தமிழர் கட்சி தென் மண்டல செய லாளர் பாஸ்கரன், தமுமுக சாயல்குடி நகரத்தலைவர் ஜவுதர் அலி ஆகியோர் விள க்க உரையாற்றினர்.
