சாத்தூரில் வளர்ச்சித் திட்டப் பணிகள் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
சாத்தூர், ஜன.29- சாத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சுக புத்ரா நேரில் ஆய்வு செய்தார். சாத்தூரில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் “உலகம் உங்கள் கையில்” திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கப்படு வதையும், வெங்கடாசலபுரத்தில் அமல் படுத்தப்பட்ட அரசு திட்டங்கள் மற்றும் பய னாளிகள் விபரங்களை ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து உங்க கனவ சொல்லுங்க திட்டத்தின் படிவங்கள் வழங்கப்படுதல் மற்றும் நியாய விலைக் கடையில் பொருட்களின் தரம் மற்றும் இருப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும், சாத்தூர், தில்லைநகரில் புதிய வாக்காளர்களை சேர்ப்பதற்கான படிவம்-6 வழங்கும் பணிகளையும் ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் சாத்தூர் ஆணையாளர் ஜெகதீஸ்வரி, வட்டாட்சியர் உட்பட பலர் பங்கேற்றனர்.
