tamilnadu

img

ஏர்வாடி தர்ஹா மத நல்லிணக்க திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

ஏர்வாடி தர்ஹா மத நல்லிணக்க திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

இராமநாதபுரம், மே 11- இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹாவில் உலக பிரசித்தி பெற்ற மஹான்  குத்புல் அக்தாப் சுல்தான் செய் யது இப்ரா ஹிம் ஷஹீத் ஒலியுல்லாஹ் தர்ஹாவில்  வருடம் தோறும் மத நல்லிணக்கத்திற்கான சந்தனக்கூடு எனும் மத நல்லிணக்க  விழா பெரும் விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த வருடத்தின் 851  ஆம் ஆண்டின் சந்தனக்கூடு எனும்  மத நல்லிணக்க விழா முதல் நிகழ்ச்சி யாக ஏப்.29 இல் தொடங்கியது. இந்  நிலையில் மே 9ஆம் தேதி கொடியேற் றம் செய்யப்பட்டது. மே 21-ம் தேதி மாலை தொடங்கி மே 22  ஆம் தேதி அதிகாலை மேளதாளத்துடன் அனைத்து சமுதாயத்தினரும் அணி வகுக்க, புனித மக்பராவில் சந்தனம் பூசப்பட்டு சந்தனக்கூடு எனும் மத நல்லி ணக்க விழா நடைபெறும். அதனைத் தொடர்ந்து மே 28 ஆம்  தேதி கொடியிறக்கப்பட்டு மத நல்லிணக்க நிகழ்ச்சி நிறைவுபெறுகிறது.