தமிழ்நாட்டின் தென் மாவட்டமான தூத்துக்குடி மாவட் டம், திருச்செந்தூர் தாலுகா ஆத்தூர் கிராமத்தில் 1986 ஆம் ஆண்டில் பிறந்தவர் தமீம் அன்சாரி. தந்தையை இழந்ததால் பிழைப்பு தேடி தாய், சகோதரி களுடன் 1993 இல் சென்னைக்கு வந்துள்ளார் தமீம். அன்றைக்கு அவரது வயது 7. கூலி வேலைக்குச் சென்ற தாய், தமீம் அன்சாரியை அரசுப் பள்ளியில் சேர்த்துள்ளார். வறுமையின் கொடுமை பள்ளிப் படிப்பை தொடர விடவில்லை. தனியார் கம்பெனி ஒன்றில் கூலி வேலையில் சேர்ந்துள்ளார். அப்போது நிகழ்ந்த விபத்தில் அன்சாரி ஒரு கையை இழந்தார். சில வருடங்களுக்குப் பிறகு, மாற்றுத்திறனாளிகள் சேவை அமைப்பு டன் இணைந்து சில ஆண்டுகள் பய ணித்த அன்சாரி, ஒரு தனியார் இன்சூரன்ஸ் நிறுவ னத்தில் முகவராக சேர்ந்து வாழ்க்கை பயணத் தில் அடுத்த கட்டத்தை நகர்த்தியுள்ளார். இந்த நேரத்தில்தான், உலகையே புரட்டிப் போட்ட கொரோனா பெருந்தொற்று அவரது வாழ்க்கையையும் சுழற்றி அடித்தது. பிறந்த தினத்தை யொட்டி, தங்கையின் குழந்தை ஆசையாக கேட்டதைக்கூட வாங்கி கொடுக்க பணம் இல்லை.
திருப்புமுனை
இச்சூழ்நிலையில், பழைய சைக்கிள் ஒன்று கிடைத்திருக் கிறது. அந்த சைக்கிள் தான் அவரது வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்தியது. வேகமாக சைக்கிள் ஓட்டும் இவர், சைக்கிள் பந்தயத்தில் பங்கேற்க நண்பர்கள் உதவி செய்துள்ளனர். அன்றைக்கு புறப்பட்ட சைக்கிள் பயணத்தை 200 கிலோ மீட்டரில் நிறைவு செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து, 2021 ஆம் ஆண்டில் ‘போக்கஸ்’ என்ற சைக்கிளை நண்பர் கள் வாங்கி கொடுத்துள்ளனர். இந்த சைக்கிளில் சுமார் 42 ஆயிரம் கிலோ மீட்டருக்கு பயணம் மேற்கொண்டு உள்ளார். 200 கிலோ மீட்டர், 300, 400 மற்றும் 600 கிலோ மீட்டர் என்று மூன்று முறை சூப்பர் சைக்கிள் ரைடர் சென்றிருக்கிறார். திருச்சியில் தொடங் கிய ஐந்து நாட்கள் சைக்கிள் பந்தயத்தில், 200 கிலோ மீட்டர் தூரத்தை 11 மணி நேரம் 43 நிமிடத்தில் செங்கல்பட்டில் வெற்றிகர மாக நிறைவு செய்திருக்கிறார்.
சாதனை, சாதனை...
திருச்சியில் இருந்து மதுரை, மீண்டும் திருச்சி என்று 300 கிலோ மீட்டர் தூரத்தை 19 மணி நேரம் 30 நிமி டத்தில் இலக்கை எட்டியுள்ளார். மூன்றாவது பந்தயத்தில் 37 மணி நேரம் 55 நிமிடங்கள் பயணம் செய்து 600 கிலோ மீட்டரை நிறைவு செய்துள்ளார். சேலத்தில் தொடங்கிய சைக்கிள் பயணத்தை வேலூர், திருப்பதி, ஸ்ரீபெரும்புதூர், சிங்கப்பெருமாள் கோவில், புதுச்சேரி, மதுரை பிறகு மீண்டும் சேலத்தை 90 மணி நேரத்தில் கடக்க வேண்டிய பந்தயத்தில் 87 மணி நேரம் 23 நிமிடத்தில் கடந்து சாதனை படைத்துள்ளார். ‘குழந்தைகளிடம் செல்பேசியை அதிகம் கொடுக்கா தீர்’ என்பதை வலியுறுத்தி சென்னையில் இருந்து கன்னியா குமரி வழியாக திருவனந்தபுரம் வரை 800 கிலோ மீட்டர் தூரம் பயணம் மேற்கொண்டுள்ளார். “ஊர் சுத்தம் கடல் சுத்தம்” என்று சென்னையில் புறப்பட்டு கிழக்கு கடற்கரை சாலை மார்க்கமாக தனுஷ்கோடி வரை 500 கிலோ மீட்டர் தூரத்திற்கும், ‘உடற்பயிற்சி, உடல்நலம் பாதுகாப்போம்’ என்று கோவையில் புறப்பட்டு ஊட்டி வழியாக சென்னையில் 600 கிலோ மீட்டர் பயணத்தை நிறைவு செய்துள்ளார். சமீபத்தில் காஷ்மீரில் தொடங்கி கன்னியா குமரி வரை 3,600 கிலோ மீட்டர் தூரம் பயணித்திருக்கிறார். வருகிற அக்டோபர் 1 ஆம் தேதி ஜம்முவில் தொடங்கி பஞ்சாப் லூதியானா, புதுதில்லி, குவாலியர், நாக்பூர், ஹைத ராபாத், அனந்தபூர், பெங்களுரு, மதுரை வழியாக அக்.14 அன்று கன்னியாகுமரியில் 3,651 கிலோ மீட்டர் தூரம் பந்தயம் நடைபெறுகிறது. இதில் நாடு முழுவதும் இருந்து பலர் பங்கேற்றாலும், சென்னையிலிருந்து பங்கேற்கும் ஒரே மாற்றுத்திறனாளி தமீம் அன்சாரி. இந்த பந்தயத்தில் பங்கேற்பதற்கு நிதியுதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார் சாதனை இளைஞர் தமீம் அன்சாரி. உதவி செய்ய விரும்புவோர் - 8122300800, 9677252310 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.