tamilnadu

பாஜகவினர் சிபிஎம்-க்கு வருவதை தடுக்க கலவர இலக்குடன் திட்டமிட்ட கொலை

பத்தனம்திட்டா, டிச.4- சிபிஎம் பெரிங்கரா வட்டாரச் செய லாளர் பி.பி.சந்தீப் குமார், ஆர்எஸ்எஸ் -பாஜக கிரிமினல் கும்பலால் தலை மைக்கு தெரிந்தே படுகொலை செய்யப் பட்டதாகவும், பத்தனம்திட்டா மாவட் டத்தில் பாஜகவினர் வெளியேறி சிபிஎம் மில் இணைவதை தடுக்க கலவரத்தை உருவாக்க திட்டம் தீட்டப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.  இதில் பாஜக-வை நேரடியாக குற் றம் சாட்டாமல் இருக்க யுவமோர்ச்சா தலைவர் தலைமையிலான கும்பலை நியமித்துள்ளனர். இதுகுறித்து உயர் மட்ட விசாரணை நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. கடந்த தேர்தலில் மாவட்டத்தில் உள்ள ஐந்து தொகுதிகளிலும் எல்டிஎப் வெற்றி பெற்றது. பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகளும் எல்டிஎப் வசம் வந்தன. அப்போதிருந்தே சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க பாஜக திட்டமிட்டு வருகிறது. 

பத்தனம்திட்டாவில், பாஜக மற் றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர், தங்கள் குடும்பத்தினருடன் சிபிஎம் இல் இணைந்தனர். பெரிங்கரா ஊராட்சி யை உள்ளடக்கிய திருவல்லா பகுதி யில், சமீபத்தில், நூற்றுக்கணக்கா னோர், பாஜகவில் இருந்து விலகி, சிபிஎம்மில் இணைந்தனர். இது பாஜக வினரை எரிச்சலடையச் செய்தது.  நவம்பர் 29-ஆம் தேதி கோட்ட யத்தில் நடைபெற்ற பாஜக உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் இது குறித்து விவா திக்கப்பட்டது. பின்னர் ராந்நியிலும் பத்தனம்திட்டாவிலும் கூட்டங்கள் நடைபெற்றன. பாஜக தலைவர் கே. சுரேந்திரன் கலந்து கொண்ட கூட்டத் தில்தான் இந்த அராஜகத்தை நடத்த ஏற்பாடாகியுள்ளது. இதையடுத்து கருவாற்றயில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் சந்தீப்பை கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள் ளது. இதற்காக போதை, சாராய மாபியாக்கள் மற்றும் கூலிப்படையில் உள்ளவர்கள் ஏற்பாடு செய்யப்பட்ட னர். இது சிபிஎம் உள்ளூர் செயலாளர் படுகொலையில் தொடங்கியுள்ளது. தலச்சேரியில் கலவரம் நடத்தும் திட் டத்தையும் முக்கிய குழு கூட்ட முடிவு உறுதி செய்கிறது. சந்தீப் கொலையில் யுவமோர்ச்சா பெரிங்கரா பஞ்சாயத்து தலைவர் ஜிஷ்ணு முக்கிய குற்றவாளி. பாஜக போராட்டங்களில் முன்னணியில் இருப்பவர் மற்றும் தலைவர்களுடன் ஜிஷ்ணுவின் பல படங்கள் சமூக வலை தளங்களில் உள்ளன. பாஜக செய்தித் தொடர்பாளர் சந்தீப் வாரியருடன் ஒரு படமும் உள்ளது.

கொலைக் கும்பல் கைது

சந்தீப் குமார் (36) கொலையில் நேரடியாக தொடர்புடைய கூலிப் படையினர் 5 பேர் சில மணி நேரங்க ளில் கைது செய்யப்பட்டனர். பெரிங் கரா பஞ்சாயத்து யுவமோர்ச்சா தலை வர் ஜிஷ்ணு (23), நந்து (24), பிர மோத் (23), கண்ணூரைச் சேர்ந்த முக மது பைசல் (22), அபிஜித் (25) ஆகி யோர் கைது செய்யப்பட்டனர். இவர் களிடம் விரிவான விசாரணை நடை பெற்று வருகிறது. ஜிஷ்ணு மீது கீழைப்பூர், திரு வல்லா, அடூர், புலிகேசு, ஏற்றுமானூர், காந்திநகர், கண்ணூர் ஆகிய காவல் நிலையங்களில் பல வழக்குகள் உள்ளன.

ஐந்தரை ஆண்டுகளில்  16 கொலைகள்

பினராயியில் ரவீந்திரன் முதல் திரு வல்லாவில் பெரிங்கரா வட்டாரச் செய லாளர் பி.பி.சந்தீப்குமார் வரை 16 சிபிஎம், டிஒய்எப்ஐ, எஸ்எப்ஐ ஊழி யர்கள் கடந்த ஐந்தரை ஆண்டுகளில் அரசியல் எதிரிகளால் கொலை செய் யப்பட்டனர். 11 கொலைகளை செய்தது ஆர்எஸ்எஸ். காங்கிரஸ்காரர்கள் மூன்று பேரைக் கொன்றனர். கொலை யாளிகளில் முஸ்லிம் லீக் மற்றும் எஸ்டி பிஐ-யினரும் உள்ளனர்.