சேலம், ஜன. 30 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட அமைப்பாளராக செ. முத்துக் கண்ணன் செயல்படுவது எனத் தீர்மானிக்கப் பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட பேரவைக் கூட்டம் (ஜனவரி 30) வியாழனன்று நடைபெற்றது. இதில், கட்சியின் மாவட்ட மாநாட்டில், ஸ்தாபனக் கோட்பாடுகளுக்கு மாறான போக்குகள் வெளிப்பட்டதையொட்டி மாவட்டக் குழுவை கலைப்பது என்று ஜனவரி 28அன்று நடைபெற்ற கட்சியின் மாநிலக் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு, அமைப்புக் குழு உருவாக்கப்பட்டது. இதன்தொடர்ச்சியாக, சேலத்தில் நடைபெற்ற கட்சியின் சிறப்பு பேரவைக் கூட்டத்தில் 15 பேர் கொண்ட புதிய மாவட்ட அமைப்புக் குழு அறிவிக்கப்பட்டது. மாவட்ட அமைப்பாளராக மாநில செயற்குழு உறுப்பினர் செ.முத்துக்கண்ணன் செயல்படுவது என்று தீர்மானிக்கப்பட்டது. பேரவைக் கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், மத்தியக் குழு உறுப்பினர் பி.சம்பத் உள்ளிட்டு பலர் பங்கேற்றனர்.