முதல்வருடன் சிபிஎம் தலைவர்கள் சந்திப்பு முக்கியப் பிரச்சனைகள் குறித்து முறையீடு!
சென்னை, அக். 16 - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் கே. சாமு வேல் ராஜ், சட்டமன்ற உறுப்பினர் கள் வி.பி. நாகை மாலி, எம். சின்னத்துரை மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர்கள் சந்தித்து, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். குறிப்பாக, கோவை பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு நீதி மன்றம் அறிவித்துள்ள இழப்பீட்டுத் தொகையை வழங்கிட வேண்டும்; சென்னை அண்ணா பல்கலைக்கழ கத்தில் துப்புரவு பொறியியல் துறை யை துவக்கி புதிய உபகரணங்கள் கருவிகளை உருவாக்கிட வேண்டும்; பதவி உயர்வில் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பலன்களைப் பெற்றவர்களுக்கு பாதகமான நீதி மன்றத் தீர்ப்பு பிரச்சனையில் அரசு தலையிட்டு தீர்வுகாண வேண்டும் என முதல்வரிடம் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தலைவர்கள் வலி யுறுத்தினர். அதேபோல, வடசென்னை கொடுங்கையூரில் குப்பைகளை எரித்து மின்சாரம் தயாரிக்கும் ஆபத்தான எரி உலை திட்டத்தை ரத்து செய்திட வேண்டும்; கேபிள் டிவி தொழிலில் பழைய ஆப்ரேட்டர் பகுதியில் புதிய LCO போடுவதை உடனே நிறுத்த வேண்டும்; தமிழ்நாடு கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் மற்றும் தொழி லாளர்கள் நலவாரியத்தில் டிசிஓஏ (TCOA) சங்கத்திற்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்றும் முதல்வரி டம் முறையீடுகளை வைத்தனர். தமிழக கேபிள் டிவி ஆப்ப ரேட்டர்கள் பொதுநலச் சங்கம், வட சென்னை குடியிருப்போர் நலச்சங்கங் களின் கூட்டமைப்பு ஆகிய அமைப்பு களின் தலைவர்களும் இந்தச் சந்திப்பில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களோடு பங்கேற்றனர். இந்நிலையில், கோரிக்கைகள் அனைத்தையும் கேட்ட முதல்வர், உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வ தாக தலைவர்களிடம் தெரிவித்தார்.