திரிணாமுல் எம்.பி., சாகேத் கோகலே
இந்தியா இறக்குமதி செய்யும் பொருட்கள் அமெரிக்காவிலிருந்து 11 சதவீதம், ஐக்கிய அமீரகத்திலிருந்து 33 சதவீதம், பிரிட்டனிலிருந்து இறக்குமதி 54 சதவீதம், சீனாவில் இருந்து 16 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த லட்சணத்தில்தான் சொந்த நாட்டு பொருட்களை பயன்படுத்த வேண்டுமென மக்களுக்கு பிரதமர் உபதேசம் செய்கிறார். நம் தொழில் கொள்கையும் வெளியுறவுக் கொள்கை போல கேலிக்குள்ளாகி விட்டது.
ஊடகவியலாளர் கிருஷ்ண காந்த்
ஒரு பெண் வாக்காளரின் வயது 124. ஆனால் அவரது தந்தையின் வயது 43. கேள்விகள் எழுப்பியதால், தேர்தல் ஆணையம் எந்த பதிலும் சொல்லாமல் அப்பெண் வாக்காளரின் பெயரை நீக்கியிருக்கிறது. அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டினால், பாஜக பங்குபெறவில்லை. திருடனுக்கு தேள் கொட்டி விட்டதா?
கர்நாடகா அமைச்சர் பிரியங்க் கார்கே
சாதிவாரி கணக்கெடுப்பு என்பது அரசின் முன்னெ டுப்பு. இந்த கணக்கெடுப்பில் சாதியுடன் சேர்த்து பிற விவரங்களும் சேகரிக்கப்படும். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு சுதா மூர்த்தி, கணக் கெடுப்பை புறக்கணித்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. நிச்சயமாக அவரின் முடிவுக்கு பின்னால் பாஜகவினர் தூண்டுதல் இருக்கும்.
காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ்
ரஷ்ய எண்ணெய்யை இந்தியா வாங்காது என டிரம்ப் அறிவித்திருக்கிறார். இந்திய அரசின் முடிவுகளை அமெரிக்காவுக்கு மோடி தாரை வார்த்துவிட்டார் போல!