தொழிற்சங்கங்களின் தொடர் அழுத்தம் வெற்றி
என்டிசி தொழிலாளர்களுக்கு பகுதி ஊதியம்
புதுதில்லி, அக். 16 - என்டிசி பஞ்சாலைத் தொழிலாளர் களுக்கு தீபாவளிக்கு முன்னரே ஊதியம் வழங்கப்பட வேண்டும் என தொழிற் சங்கங்கள் கொடுத்த அழுத்தத்தை யடுத்து, ஒரு பகுதி ஊதியத்தை என்டிசி தொழிலாளர்களுக்கு வழங்கும் உத்த ரவை, ஜவுளித்துறை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் 7 பஞ்சாலைகள் நாடு முழுவதும் 23 என்டிசி பஞ்சாலை கள் செயல்பட்டு வரும் நிலையில், தென்னிந்தியாவில் 15 ஆலைகள் இயங்கி வந்தன. இதில், தமிழகத்தில் மட்டும் மொத்தம் 7 பஞ்சாலைகள் செயல்பட்டன. கோயம்புத்தூரில் பங்கஜா மில்ஸ், கம்போடியா மில்ஸ், கோயம்புத்தூா் ஸ்பின்னிங் அண்டு வீவிங் மில்ஸ், ஸ்ரீரங்கவிலாஸ் மில்ஸ், முருகன் மில்ஸ் என 5 ஆலைகளும், சிவகங்கை மாவட்டம், காளையார் கோவிலில் காளீஸ்வரா மில்ஸ், இராம நாதபுரம் மாவட்டம், கமுதக்குடியில் பயனீா் ஸ்பின்னா்ஸ் ஆகிய 2 மில்களும் இதில் அடங்கும். 8 மாதங்களாக ஊதியம் நிறுத்தம் நாடு முழுவதும் கொரோனா பொதுமுடக்கத்தை ஒட்டி, 2020 மார்ச் முதல் மூடப்பட்டிருக்கும் ஒன்றிய ஜவுளித் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள என்டிசி பஞ்சாலைகள் திறக்கப் படாததால், பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்காத காலத்திற்கு வழங்கப்பட்டு வந்த பாதி ஊதியமும் கடந்த 8 மாதங்களாக நிறுத்தப்பட்டி ருந்தது. இதனால், தொழிலாளர்களின் குடும்பங்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியிருந்தன. பணமில்லை என்ற அரசு அதிகாரிகள் இந்நிலையில், தில்லி உத்யோக் பவனில் ஜவுளித்துறைச் செயலாள ரோடு தொழிற்சங்கத் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆரம்பத் தில், பணம் கொடுக்க வழியில்லை என அதிகாரிகள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. எனினும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த திண்டுக்கல் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சச்சி தானந்தம் தலைமையில், சிஐடியு பஞ்சாலை சங்கப் பொதுச்செயலாளர் சி. பத்மநாபன், எச்எம்எஸ் சங்கத் தலைவர் டி.எஸ். இராஜாமணி உள்ளிட்டோர், தீபாவளிக்கு முன்னரே நிலுவைத் தொகையை வழங்கக் கோரித் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தனர். தீவிர அழுத்தத்தால் பகுதி ஊதியத்திற்கு ஒப்புதல் தொழிற்சங்கத் தலைவர்களின் இந்த தீவிர அழுத்தம் காரணமாக, வேலையில் இருப்பவர்களுக்கு 25 சத விகிதமும், வேலையில் இல்லாத வர்களுக்கு 12.5 சதவிகிதமும் ஊதியம் வழங்க ஒன்றிய ஜவுளித்துறைச் செய லாளர் நீலம் சாமிரா உத்தரவிட்டுள்ளார். இந்தத் தொகை தீபாவளிப் பண்டி கைக்கு முன்னரே வழங்கப்படும் எனத் தெரிகிறது. முன்னதாக, ஊதியப் பிரச்சனை தவிர, மூடப்பட்டிருக்கும் என்டிசி பஞ்சாலைகளை நவீனப்படுத்தி மீண்டும் இயக்க வேண்டும், மேலும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் உள்ளிட்ட முக்கியக் கோரிக்கைகள் குறித்தும் ஒன்றிய ஜவுளித்துறை செயலாளர் மற்றும் அதிகாரிகளோடு தொழிற்சங்கத் தலைவர்கள் குழுவினர் விரிவாகக் கலந்துரையாடினர். மூடப்பட்டுள்ள ஆலைகளை மீண்டும் திறக்க வலியுறுத்தி என்டிசி தொழிலா ளர்கள் தொடர் போராட்டங்களில்