tamilnadu

img

வஞ்சிக்கப்படும் சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்கள்!

வஞ்சிக்கப்படும் சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்கள்!

மறைந்த முன்னாள் முதல் வர் கருணாநிதி கடந்த 2008 ஆம் ஆண்டு, சுதந்திர தின விழாவின்போது, ஓய்வுபெறும் சத்துணவு அங்கன்வாடி அமைப் பாளர்களுக்கு ரூ.700/-, சமை யலர்களுக்கு ரூ.600/-, உதவி யாளர்களுக்கு ரூ.500/- என சிறப்பு ஓய்வூதியமாக அறிவித் தார். அதன் பிறகு முதல்வர் ஜெய லலிதா ஆட்சிக்கு வந்த பிறகு, மாதந்தோறும் ரூ.1000 என அனைவருக்கும் அறிவித்தார். அதன்பின் தொடர்ந்து நடந்த போராட்டங்களின் விளைவாக 2016 இல் ரூ.500 உயர்த்தப்பட்டு அனைவருக்கும் ரூ.1500 அறிவித்தார். ஏழாவது ஊதியக் குழு  அரசு ஊழியர்களுக்கு 2.57 என்ற காரணி அடிப்படையில் ஊதியம் உயர்த்தி வழங்கி யது. ஆனால் ஓய்வு பெற்ற சத்துணவு ஊழி யர்களுக்கு ரூ. 500 மட்டும் உயர்த்தி ரூ. 2000 ஆக வழங்கியது. ஏழாவது ஊதியக்குழு சிறப்பு ஊதிய மாக ரூ.1500 ஐ 2.57 என்ற காரணியால் கணக்கிட்டு வழங்கினால், 1500x2.57= 3855 + 4%=154.20 +300 என ரூ.4290/- வழங்கி யிருக்கலாம். குறைந்தபட்ச ஓய்வூதிமாக வரு வாய் கிராம ஊழியருக்கு ரூ. 6750 வழங்கப் பட்டு வருகிறது. இந்த ஓய்வூதியம் எங்க ளுக்கு வழங்கினால், இன்றைய விலைவாசி யில் ஓரளவு வாழ்க்கை நடத்த உதவியாக இருக்கும். முன்னாள் முதல்வர் கருணாநிதி 2008 ஆம் ஆண்டு அறிவித்த சிறப்பு ஓய்வூதியம், தற்போது வழங்கப்படும் ரூ. 2000/- உடன் சேர்த்து வழங்கினால், அமைப் பாளருக்கு ரூ. 2700/-, சமை யலருக்கு ரூ.2600/-, உதவியா ளர்களுக்கு ரூ. 2500/- என்ற விகிதத்தில்+ அகவிலைப்படி (DA) + மருத்துவப்படி (MA) சேர்த்து வழங்கினால் அமைப் பாளருக்கு ரூ.4431, சமையல ருக்கு ரூ. 4279, உதவியாளருக்கு ரூ. 4125 என கிடைத்திருக்கும். ஆனால் இந்த தொகையையும் வழங்காமல் எங்களை வஞ்சித்து விட்டது.  இந்த தொகையை வழங்க கூடுதலாக ரூ.227 கோடி தேவைப்படும். கடந்த 4 ஆண்டுகளில் மகளிர் உரிமைத்தொகை, மாணவர்களுக்கு உதவித் தொகை, முதியோர் உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகள், விளை யாட்டு வீரர்களுக்கு உதவித் தொகை என உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஊதியம், தற்போது ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. கடந்த நாற்பது ஆண்டுகளாக புயல், மழை, வெயில் என கால நேரம் பார்க்கா மல் உழைத்த எங்களுக்கு, கடந்த ஏழு  ஆண்டுகளாக ஊதியம் உயர்த்தப்பட வில்லை என்பது வேதனை அளிக்கின்றது. சென்னை உயர்நீதிமன்றம் ஓய்வுபெற்ற சத்து ணவு அங்கன்வாடி ஊழியர்களுக்கு ரூ.3850 வழங்க உத்தரவிட்டுள்ளது. தற்போது அரசு வழங்கும் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை, தற்போது நடைபெறும் சட்டமன்ற கூட்டத் தொடரில் நிறைவேற்றினால் ஊழியர்களின் எதிர்பார்ப்பு ஓரளவு நிறைவேறும். -முன்னாள் மாநிலச் செயலாளர், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம்