தனியார் பல்கலை. திருத்த மசோதா சிபிஎம் எதிர்ப்பையும் மீறி நிறைவேற்றம்
சென்னை, அக். 17 - உயர்கல்வியை தனியார்மயத்தை நோக்கித் தள்ளும் வகையில், தனி யார் பல்கலைக்கழகங்கள் சட்டத் திருத்த மசோதா இருப்பதாக விமர்ச னங்கள் எழுந்த நிலையிலும், இந்த சட்டத் திருத்த மசோதாவை, திமுக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி யுள்ளது. 2019-ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகச் சட்டத்தில் மேலும் திருத்தம் செய்வதற்கான சட்ட முன்வடிவு, தமிழக சட்டமன்றத்தில் வியாழனன்று உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியனால் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்தது. அரசு உதவி பெறும் தனியார் கல் லூரிகள் உள்ளிட்டவற்றை தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்றுகிற திருத்தம், மாணவர்கள் உயர்கல்வி பெறும் வாய்ப்புக்கு எதிரானது. தனி யார் பல்கலைக்கழகத்திற்கு குறைந்த பட்சம் 100 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும் என்ற விதியை தளர்த்தி, மாநகராட்சிப் பகுதிகளில் 25 ஏக்கர், நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதி களில் 35 ஏக்கர், இதர பகுதிகளில் 50 ஏக்கர் இருந்தாலே பல்கலைக்கழகம் ஆரம்பிக்கலாம் என்று சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்ட முன்வடிவு உயர்கல்வி யை மேலும் தனியார்வசம் ஒப்படைப்ப தாகவே அமையும். இத்தகைய சட்ட முன்வடிவு உயர்கல்வி மேம்பாட்டை பின்னோக்கித் தள்ளுவதாகவே அமையும். குறிப்பாக, ஓபிசி, எஸ்சி, எஸ்டி மாணவர்களின் கல்வி வாய்ப்பை பறிப்பதாக இருக்கும். மேலும், மக்களின் வரிப் பணத்தி லிருந்து உருவாக்கப்பட்ட, வளர்த்தெடுக்கப்பட்ட அரசு உதவி பெறும் கல்வி நிலையங்களை தனியார் லாப வேட்டைக்கு அனுமதிப்பது ஆகும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழு தலைவர் வி.பி. நாகை மாலி மற்றும் துணைத் தலைவர் மா. சின்னதுரை ஆகியோர் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மனு அளித்தும் முறையிட்டனர். இதுபோன்ற மசோதா 15 ஆண்டு களுக்கு முன்பு, கலைஞர் ஆட்சிக் காலத்திலேயே முயற்சிக்கப்பட்டு, கடும் எதிர்ப்பின் காரணமாக கைவிடப் பட்டதையும் சுட்டிக்காட்டினர். அதிமுக, தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் ஆதரவு தெரிவித்துப் பேசினர். இந்நிலையில், வெள்ளிக்கிழமை யன்று இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியதாக பேரவைத் தலைவர் அறிவித்தார். அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் பல்கலைக் கழகமாக மாற்றப்படும் பட்சத்தில் அந்தக் கல்லூரியில் படித்துக் கொண்டி ருக்கும் மாணவர்களும் படிப்பை முடிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் மசோதாவில் குறிப்பிடப்பட் டுள்ளது.