கோவை - சிங்கப்பூர் இடையே இண்டிகோ விமான சேவை ரத்து
கோவை, அக்.16- கோவை - சிங்கப்பூர் இடையே இண்டிகோ நிறுவனம் சார் பில் வழங்கப்படும் சேவை டிசம்பர் மாதம் முதல் ரத்து செய்யப் பட்டு உள்ளது. கோவை விமான நிலையத்தை ஆண்டுதோறும் பயன் படுத்துவோர் எண்ணிக்கை 30 லட்சத்தை கடந்துள்ளது. சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட உள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் ஷார்ஜா, சிங்கப்பூர், அபு தாபி போன்ற வெளிநாடுகளுக்கும் நேரடி விமான சேவை வழங்கப்படுகிறது. வெளிநாட்டு பிரிவில் கோவை - சிங்கப்பூர் இடையே ‘ஸ்கூட்’ மற்றும் ‘இண்டிகோ’ ஆகிய இரண்டு விமான நிறு வனங்கள் சார்பில் சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், டிசம்பர் மாதம் முதல் இண்டிகோ நிறுவனம் கோவை - சிங்கப்பூர் விமான சேவையை ரத்து செய்வதாக அறிவித்து உள்ளது. இதுகுறித்து விமான நிறுவன அதிகாரிகள் கூறும்போது, “கோவை - சிங்கப்பூர் இடையே இண்டிகோ நிறுவனம் சார்பில் 2024 அக்டோபர் மாதம் நேரடி விமான சேவை தொடங் கப்பட்டது. வாரத்தில் மூன்று நாட்கள் இந்த சேவை வழங்கப் பட்டது. இரவு 8 மணிக்கு கோவையில் புறப்படும் ‘ஏர்பஸ்’ ரக விமானத்தில் 186 பேர் பயணிக்க முடியும். பயணிகள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லாத கார ணத்தால் இந்த விமான சேவை வரும் டிசம்பர் முதல் ரத்து செய்யப்படுகிறது. இதன் காரணமாக விமான நிறுவனங்கள் இயக்கம் தொடர்பாக வெளியிடப்படும் குளிர்கால அட்ட வணையில் இந்த சேவை இடம்பெறாது. கோவையில் இயக் கப்பட்டு வந்த விமானம் விஜயவாடா - சிங்கப்பூர் இடையே இயக்கப்படும், என்றனர். கோவை- சிங்கப்பூர் இடையே இண்டிகோ நிறுவனத் தின் ஒரு சேவை ரத்து செய்யப்பட்டாலும், மற்றொரு நிறுவ னம் ‘ஸ்கூட் ஏர்லைன்ஸ்’ சார்பில் வாரத்தின் அனைத்து நாட் களும் கோவையில் இருந்து இரவு 11 மணி அளவில் சிங்கப்பூ ருக்கு விமான சேவை வழக்கம் போல் தொடரும் என அதி காரிகள் தெரிவித்துள்ளனர்.
கொலை குற்றவாளிக்கு ஆயுள்
கோவை, அக்.16- கொலை குற்றவாளிக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கி னார். கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலையப் பகுதியில் கடந்த 2019 ஆம் ஆண்டு முருகேசன் என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக சூலூர் பகுதியைச் சேர்ந்த அர விந்த் குமார் என்பவர் மீது சூலூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, இந்த வழக்கு விசாரணை முத லாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடை பெற்று வந்தது. இவ்வழக்கின் விசாரணை முடிவு பெற்று குற்ற வாளி அரவிந்த் என்ற அரவிந்த் குமார் என்பவருக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இவ்வழக்கினை சிறந்த முறையில் புலன் விசாரணை மேற் கொண்ட புலன் விசாரணை அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதி மன்றத்தில் சிறந்த முறையில் நேர்நிறுத்திய நீதிமன்ற தலைமை காவலர் பிரபு ஆகியோர்களை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பாராட்டினார்.
இணையவரி குற்றம்: ரூ.2.38 கோடி மீட்பு
ஈரோடு, அக்.16- ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டில் இணையவழி குற்ற வழக்குகளில் ரூ.2.38 கோடி மீட்கப்பட்டுள்ளதென மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.சுஜாதா தெரிவித்தார். ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில், இணையவழி குற் றங்களை தடுப்பது தொடர்பாக விழிப்புணர்வு பேரணி ஈரோட் டில் புதனன்று நடைபெற்றது. மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வேலுமணி தலைமையில் நடைபெற்ற இப்பேரணியை, காவல் கண்காணிப்பாளர் அ.சுஜாதா கொடி யசைத்து துவக்கி வைத்தார். ஈரோடு அரசு மருத்துவமனை அருகே துவங்கிய பேரணி பன்னீர்செல்வம் பூங்காவில் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.சுஜாதா பேசுகையில், இன்றைய காலத்தில் இணையவழி குற்றங்கள் அதிகளவில் நடைபெறுகிறது. அதுகுறித்தான விழிப்புணர்வு பொது மக்களுக்கு இருக்க வேண்டும். இணையவழி குற்றம் தொடர் பான புகார்களுக்கு மாவட்ட சைபர் கிரைம் காவல் பிரிவை தொடர்பு கொள்ள வேண்டும். முகநூல், வாட்ஸ் ஆப் உள் ளிட்ட செயலிகள் மூலம் பங்குச்சந்தை தொடர்பாக லிங்க் வந்தால் அதனை தவிர்க்க வேண்டும். இதுதொடர்பான சந்தேகங்களுக்கு ஈரோட்டிலுள்ள சைபர் கிரைம் பிரி வில் விளக்கங்கள் பெறலாம். இணையவழி குற்றங்கள் தொடர்பாக நடப்பாண்டில் 26 புகார்கள் பெறப்பட்டுள்ளன. 117 வழக்குகள் புலன் விசாரணையில் உள்ளன. ரூ.2.38 கோடி மீட் கப்பட்டு, புகார்தாரர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன, என் றார்.
அரசு கல்லூரி ஊழியர் உயிரிழப்பு
தருமபுரி, அக்.16- வேலூர் மாவட்டம், விசாரம், ராசாத்துபுரம் பகுதியை சேர்ந்தவர் சையத் சதி (54). இவர் தருமபுரி அரசு பொறியியல் கல்லூரியில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி பிரிந்து சென்ற நிலையில், 2 மகன்கள் உள்ளனர். கல்லூரி அருகே செட்டிக்கரை பகுதியில் உள்ள வீட்டில் சையத் சதி வாடகைக்கு தங்கியிருந்தார். இந்நிலை யில், வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்தபோது, அவர் இறந்துவிட்டது தெரியவந்தது. இதுகுறித்து நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உண்டு உறைவிடப் பள்ளிகளில் ஆய்வு
உதகை, அக்.16- நீலகிரி மாவட்டம், உதகை மசினகுடி தொடக் கப்பள்ளி மற்றும் மேல் நிலைப்பள்ளி உள்ளது. இப் பள்ளியில் குழந்தைகளின் கல்வித்திறன், வகுப்பறை கள் மற்றும் உணவுப் பொருட்களின் தரம் மற்றும் இருப்புக்குறித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு நேரில் ஆய்வு செய்தார். இதன்பின் கார் குடி உண்டு உறைவிட தொடக்கப்பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்கப்ப டும் மதிய உணவின் தரத் தினை ஆய்வு செய்தார். தொடர்ந்து, குழந்தைக ளுக்கு உணவு வழங்கி, கலந் துரையாடி உணவு உட் கொண்டார். இந்த ஆய்வின் போது, கூடலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சலீம், மசினகுடி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் முனுசாமி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.