மோடி பயப்படுகிறார்: ராகுல் கடும் விமர்சனம்
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண் ணெய் வாங்குவதை நிறுத்துவதாக பிரதமர் மோடி, தன்னிடம் உறுதி அளித்துள்ளதாக அமெரிக்க ஜனாதி பதி டிரம்ப் செய்தியா ளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தார். இது குறித்து தனது எக்ஸ் தள பதிவில் ராகுல் காந்தி தெரி வித்திருப்பதாவது: டிரம்ப்பை பார்த்து மோடி பயப்படுகிறார். அதாவது, ரஷ்யா வின் எண்ணெய்யை இந்தியா வாங்காது என்று முடிவு செய்து டிரம்ப்பை அறி விக்க அனுமதிக்கிறார். பல முறை அமெ ரிக்காவால் இந்தியா அவமதிக்கப்பட்ட பிறகும் டிரம்ப்புக்கு மீண்டும் மீண்டும் வாழ்த்துச் செய்தியை அனுப்பிக் கொண்டே இருக்கிறார். ஆபரேசன் சிந்தூர் குறித்த டிரம்ப்பின் கருத்துக்கும் மோடி மறுப்பு தெரி விக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.