tamilnadu

img

சித்த மருத்துவப் பல்கலை. மசோதா விவகாரம் ஆளுநரின் கருத்தை நிராகரித்து தீர்மானம்

சித்த மருத்துவப் பல்கலை. மசோதா விவகாரம்  ஆளுநரின் கருத்தை நிராகரித்து தீர்மானம்

சென்னை, அக். 16 - தமிழ்நாடு சித்த மருத்துவப் பல் கலைக்கழக மசோதா குறித்து ஆளு நர் கூறியிருக்கும் கருத்துகளை நிரா கரித்து, தமிழக சட்டமன்றம் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றி யுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரத்திற்குப் பிறகு, சித்த மருத்துவப் பல்கலைக் கழகம் தொடர்பான தீர்மானத்தை முன்மொழிந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, “தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழக சட்ட முன்வடிவானது, நிதி சட்டமுன்வடிவு என்கிற வகைப்பாட்டில் வருகிற கார ணத்தால் இதனை பேரவையில் ஆய்வு  செய்வதற்கு அரசமைப்புச் சட்டம், கூறு 207(3)-ன்கீழ் ஆளுநரிடமிருந்து பரிந்துரை பெறப்பட வேண்டும். அதன்படி சட்டமுன்வடிவின் அச்சடிக் கப்பட்ட பிரதியானது ஆளுநருக்கு அனுப்பப்பட்டது” என்றும், “ஆளு நரோ, அரசியலமைப்புச் சட்டத்தின் படி பின்பற்றப்பட்டு வந்த வழக்க மான நடைமுறையை ஆளுநர் பின் பற்றாமல், இந்த சட்டமுன்வடிவில் உள்ள சில பிரிவுகள் குறித்து தன்னு டைய கருத்தைத் தெரிவித்து குறிப்பு அனுப்பியதுடன், மசோதாவை அறிமுகப்படுத்தும்போதே ஆளுநரின் கருத்துகளையும் பேரவையில் தெரி விக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந் தார். இது அரசியல் சட்டத்திற்கும், சட்டப் பேரவை விதிகளுக்கும் முற்றிலும் முரணானது” என்று முதல்வர் குறிப்பிட் டார். “ஒரு சட்ட முன்வடிவு பேரவை யில் விவாதிக்கப்படுகையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பேரவை உறுப்பினர்களுக்கு மட்டுமே அதில் திருத்தங்களை முன்மொழிய வோ, விளக்கங்கள் ஏற்றுக்கொள்ளப் பட்டால் திருத்தங்களை திரும்பப் பெற வோ அல்லது வாக்கெடுப்பைக் கோர வோ அதிகாரம் உள்ளது” என்றார்.  “மசோதா, பேரவையில் நிறை வேற்றப்படுவதற்கு முன்பு அதன் மீது கருத்துகள் தெரிவிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு வழங்கப்படவில்லை” என்பதைச் சுட்டிக்காட்டிய முத லமைச்சர், அதனடிப்படையில், ஆளுநர் அவர்களிடமிருந்து வரப் பெற்றுள்ள செய்தியில் இடம் பெற்றுள்ள கருத்துகளை இந்த பேரவையால் ஏற்றுக்கொள்ள இயலாது” என்றார். குறிப்பாக, ஆளுநர் பயன்படுத்திய ‘தகுந்த பரிசீலனை’ என்ற வார்த்தை  குறித்தும் முதல்வர் ஆட்சேபம் தெரிவித் தார். ‘பரிசீலனை’ (Consideration) என்று சொல்ல வேண்டிய ஆளுநர், அர சியலமைப்புச் சட்டத்திற்குப் புறம்பாக ‘தகுந்த பரிசீலனை’ (Appropriate Consideration) என்று குறிப் பிட்டிருப்பது, இந்தப் பேரவையின் மாண்பை குறைக்கக்கூடிய கருத்து என்பதால் அது ஏற்றுக்கொள்ளத்தக்க தல்ல. “சட்டம் இயற்றுவது இப்பேர வைக்கு மட்டுமே உள்ள அதிகாரம்” என்று குறிப்பிட்ட முதல்வர், “ஆளுநரி டமிருந்து வரப்பெற்ற கருத்துக்கள் அடங்கிய செய்தி அவைக் குறிப்பில் இடம்பெறுவதை மாநில சுயாட்சியின் மீது நம்பிக்கை கொண்ட எந்த உறுப்பி னரும் ஏற்க மாட்டார்கள் என்ற கார ணத்தால், அந்த கருத்துகளை இங்கே பதிவு செய்ய விரும்பவில்லை” என்றார். இறுதியாக, “2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழகச் சட்டமுன்வடிவை பேரவையில் ஆய்வு செய்வதற்கு ஆளுநர் அனுப்பியுள்ள செய்தியில் (Message) இருக்கக்கூடிய அவரின் கருத்துகள் மற்றும் பேரவையின் மாண்பைக் குறைக்கக் கூடிய அந்த வார்த்தை  அடங்கிய பகுதிகளை இப்பேரவை நிராகரிக்கிறது” என்னும் தீர்மானத்தை மொழிகிறேன். உறுப்பினர்கள் அனைவரும் இதனை ஒருமனதாக நிறைவேற்றித் தரவேண்டும் என்றார்.  அதைத்தொடர்ந்து, ஆளுநரின் தேவையற்ற நடவடிக்கைகளுக்கு எதிராக முன்மொழியப்பட்ட இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தீர்மானம் நிறைவேறிய பின்னணியில், மாநிலத்தில் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, யோகா மற்றும் இயற்கை  மருத்துவம், சோவா ரிக்பா, ஓமியோபதி ஆகியவற்றிற்காக பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவி அமைத்தல் மற்றும் ஒருங்கிணைத்தலுக்கு வகை செய்வதற்கான சட்ட முன்வடிவை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தாக்கல் செய்தார்.