வடகிழக்குப் பருவமழை தொடங்கியது இன்று 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
சென்னை, அக். 16 - தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியதாக இந்திய வானி லை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அக்டோபர் 16, 17 தேதிகளில் 12 செ.மீ முதல் 20 செ.மீ வரை மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால், ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சிவகங்கை, இராமநாதபுரம், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திரு நெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் வெள்ளிக் கிழமையன்று மிக கனமழை பெய்யும். தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், மயி லாடுதுறை, நாகப்பட்டினம், திரு வாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் சில இடங் களில் மட்டும் கன மழை பெய்யக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல சனிக்கிழமை (அக்.18) அன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தீபாவளி நாளான அக்டோபர் 20 அன்று நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.