நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதி
சென்னை, அக். 16 - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு (100)மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தவறி கீழே விழுந்ததில் நல்லகண்ணுவின் தலை யில் காயம் ஏற்பட்டது. மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட அவர், தீவிர சிகிச்சைக்குப் பின், கடந்த வாரம் உடல்நிலை சீராகி வீடு திரும்பி னார். இந்நிலையில் புதன்கிழமை யன்று நள்ளிரவு மீண்டும் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளார்.
ஆளுநருக்கு எதிரான வழக்குகள் மீது இன்று விசாரணை!
புதுதில்லி, அக். 16 - ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக, தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமையன்று விசார ணைக்கு வருகிறது. கலைஞர் பல் கலை. மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. தமிழ்நாட்டு விளையாட்டு பல்கலை. மசோதா வழக்கையும் சேர்த்து விசா ரிக்க தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் ஹரிஷ்குமார் முறையீடு செய்தார். இந்த 2 வழக்குகளும் வெள்ளிக் கிழமையன்று விசாரிக்கப்படும் என்று தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தெரிவித்துள்ளார்.
தங்கம் விலை ரூ. 95,000-ஐ கடந்தது!
சென்னை, அக். 16 - தங்கத்தின் விலை, வியாழக்கிழ மையன்று பவுனுக்கு ரூ. 320 உயர்ந்து, ரூ. 95,200 என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு கிராம் ரூ. 11,900-க்கு விற்பனை செய்யப் பட்டது. தீபாவளிக்கு இன்னும் மூன்று நாள்களே உள்ள நிலையில், ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ. 1 லட்சத்தை எட்டலாம் என்று கூறப்படு கிறது.