tamilnadu

img

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக உறுதியளித்த மோடி

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக உறுதியளித்த மோடி

டிரம்ப் பகிரங்கம் நியூயார்க்/புதுதில்லி, அக்.16 - ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தும் என்று பிரதமர் மோடி தன்னிடம் உறுதி யளித்ததாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பகிரங்கமாக போட்டு உடைத்துள்ளார். ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கக்கூடாது என டிரம்ப் தொடர்ந்து இந்தியாவை மிரட்டி வருகிறார். மேலும் ரஷ்யாவிடம் கச்சா எண் ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது வரிகளையும் விதித்தார்.  இந்நிலையில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “ரஷ்யாவிடம், இந்தியா எண்ணெய் வாங்குவதில் எனக்கு மகிழ்ச்சி இல்லை. அவர்கள் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்க  மாட்டார்கள் என்று மோடி எனக்கு உறுதியளித்தார். இது ஒரு சிறிய  செயல்முறை, ஆனால் இச்செயல் முறை விரைவில் முடிவடையும்” என பகிரங்கமாக கூறினார். மோடி சிறந்த மனிதர் என டிரம்ப் பாராட்டு “இது ரஷ்யாவை பொருளாதார ரீதியாக தனிமைப்படுத்துவதற்கான மிகப்பெரிய முன்னெடுப்பு” எனவும் கூறிக் கொண்ட டிரம்ப், “சீனாவையும் இதேபோல செய்ய வைக்கப் போகி றோம்; மோடி ஒரு சிறந்த மனிதர். அவர் என்னை நேசிக்கிறார். நான் அவ ரது அரசியல் வாழ்க்கையை அழிக்க விரும்பவில்லை” என டிரம்ப் பேசி யுள்ளார். இந்நிலையில் பிரதமர் மோடி டிரம்ப்புக்கு இத்தகைய உறுதியை கொடுத்தாரா என்பது குறித்த கேள்வி களுக்கு அமெரிக்காவில் உள்ள இந்தியத் தூதரகம் உடனடியாக பதிலளிக்கவில்லை. வழக்கம்போல வெளியுறவு அமைச்சகம் மழுப்பல் இதனிடையே, டிரம்ப்பின் பேட்டி தொடர்பாக ஒன்றிய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ் வால் வெளியிட்டுள்ள அதிகாரப் பூர்வ பதிவில், மோடி டிரம்ப்பிடம் அவ்வாறு கூறவில்லை என்றோ அல்லது டிரம்பின் பேச்சுக்கு கண்ட னமோ தெரிவிக்கவில்லை. மாறாக, “இந்திய நுகர்வோரின் நலன்களைப் பாதுகாப்பதே எங்களின் தொடர்ச்சி யான முன்னுரிமையாக இருந்து வரு கிறது” என மழுப்பி சமாளித்துள்ளது.  மேலும் “எண்ணெய் மற்றும் எரிவாயுவை கணிசமாக இறக்குமதி செய்யும் நாடு இந்தியா. சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை நிலை யற்றதாக உள்ள நிலையில், இந்த அடிப்படையில்தான் எங்களின் இறக்குமதி கொள்கைகள் செயல் படுத்தப்படுகின்றன” என்று கூறியுள் ளார். ரஷ்யாவிடம் கொள்முதல் 14 சதவிகிதம் குறைந்தது ரஷ்யாவிடம் இருந்து இந்தியா, கச்சா எண்ணெய்யை அதிகமாக கொள்முதல் செய்வதாக கூறினா லும், கடந்த ஆகஸ்ட் மாதம் செய்த கொள்முதலை விட சுமார் 14 சத விகிதம் குறைவாகவே செப்டம்பர் மாதத்தில் ரஷ்யா கச்சா எண்ணெய் யை, இந்தியா கொள்முதல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.