tamilnadu

img

எளிய மக்களின் வாக்குரிமையைப் பறிக்க சதி! வேடசந்தூர் பொதுக்கூட்டத்தில் மதுக்கூர் இராமலிங்கம் எச்சரிக்கை

எளிய மக்களின் வாக்குரிமையைப் பறிக்க சதி!  வேடசந்தூர் பொதுக்கூட்டத்தில் மதுக்கூர் இராமலிங்கம் எச்சரிக்கை

திண்டுக்கல், நவ. 18 - தமிழ்நாட்டில் எளிய மக்களின் வாக்குரிமையைப் பறிப்பதற்கான சதி நடந்து வருகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் குற்றம் சாட்டியுள்ளார்.  திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஞாயிறன்று (நவம்பர் 16) நடைபெற்ற நவம்பர் புரட்சி தினப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், இந்தியத் தேர்தல் ஆணையம் தனது நம்பகத்தன்மையை இழந்துவிட்டதாகவும், ஒன்றிய பாஜக அரசால் ஜனநாயகத்தின் அடித்தளமே அரிக்கப்படுவதாகவும் கூறினார்.  தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை கேள்விக்குறி  வாக்காளர்கள் தங்கள் வாக்கு களைப் பட்டியலில் சேர்ப்பதற்கே பெரும்பாடு படுவதாகச் சுட்டிக்காட்டிய மதுக்கூர் இராமலிங்கம், இதற்குத் தேர்தல் ஆணையத்தின் குளறுபடிகளே காரணம் என்றார். மூன்றாம் வகுப்பு படிக்காதவர்களையும் தேர்தல் அதிகாரி யாக நியமித்துள்ளதாக அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசி யதை நினைவு கூர்ந்தார். ஒரு வாக்காளர் வாக்குச்சாவடி அலுவலருக்குத் தொலைபேசி மூலம் அழைத்தபோது, அவர் திருச்சி பாலக்கரையில் கத்திரிக் காய் விற்கும் வியாபாரி என்று தெரிவித்த நிகழ்வையும் அவர் குறிப்பிட்டார்.  ஐ.பி.எஸ். படித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கே வாக்கா ளர் பதிவுப் படிவம் (எஸ்.ஐ.ஆர். படிவம்) புரியவில்லை எனும்போது, ஐந்தாம் வகுப்பு படித்த சாதாரண மக்களுக்கு எப்படிப் புரியும் என்று கேள்வி எழுப்பி னார். கள்ள ஓட்டுகளைத் தடுப்பதற்காக எஸ்.ஐ.ஆர். கொண்டு வரப்பட்டதாகச் சொன்னாலும், “ஒரே ஆளுக்கு 44 ஓட்டு களும், ஒரே வீட்டில் 148 பேர் வசிப்ப தாகவும்” பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. முன்பு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன் ஆகியோரின் வாக்குகளையே கள்ள ஓட்டு போட்ட வரலாறு உள்ள நிலையில், இன்று எளிய மக்களின் வாக்கு மதிப்பைக் காலி செய்துவிடுவார்கள் போல் தெரிகிறது என்று கவலை தெரிவித்தார்.  பீகார் தேர்தல் வெற்றியானது, “பாஜக-ஐக்கிய ஜனதாதளக் கூட்ட ணிக்குக் கிடைத்த வெற்றி அல்ல; அது தேர்தல் ஆணையக் கூட்டணிக்குக் கிடைத்த வெற்றி” என்று விமர்சித்தார். அதிக வாக்குகள் பெற்ற ராஷ்ட்ரிய ஜனதா  தளத்திற்குக் குறைவான எம்.எல்.ஏ.க் களும், குறைவான ஓட்டுகள் வாங்கிய  பாஜக-வுக்குக் கூடுதல் எம்.எல்.ஏ.க் களும் கிடைத்துள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தும் விகி தாச்சார தேர்தல் முறை அமல்படுத்தப் பட்டால் மட்டுமே, டாக்டர். அம்பேத்கர்  கூறியது போல, “யார் வாக்களித்தாலும் ஒரே மதிப்பு” என்ற நிலை பாதுகாக்கப் படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.  ஆணவப் படுகொலை வழக்கில் நீதியை நிலைநாட்டிய இயக்கம் பாதிக்கப்பட்டோருக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி களத்தில் நிற்பதை விளக்கிய மதுக்கூர் ராமலிங்கம், கிருஷ்ணகிரியில் நடந்த ஆணவப் படு கொலை வழக்கை சுட்டிக்காட்டினார். கிருஷ்ணகிரியில் நடந்த இரட்டைக் கொலையில் படுகாயமடைந்து பிழைத்த அனுசுயா என்ற மகளுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு தீண்டா மை ஒழிப்பு முன்னணியும் இணைந்து வழக்கை எடுத்து நடத்தி, நீதியை நிலை நாட்டியது. அனுசுயா அளித்த பேட்டியில், வழக்கை நடத்திய தோழர், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலை வருமான கே. சாமுவேல்ராஜ் அவர்களை  ‘அப்பா’ என்றும், அவரது மனைவி சுகந்தியை ‘அம்மா’ என்றும் அழைப்ப தாகக் கூறியதுதான் ஒரு கம்யூ னிஸ்ட்டுக்குக் கிடைக்கும் மிகப் பெரிய பெருமை என்றார். மேலும், செங்கொடி இயக்கம் என்பது புரட்சி நாயகன் சேகுவேராவின் வாரிசுகள் மற்றும் தியாகி பகத்சிங்கின் படை வரிசை என்றும் பெருமிதம் கொண்டார்.  டிரம்ப் வரிவிதிப்பால் பஞ்சாலைகள் நெருக்கடி : ஆர். சச்சிதானந்தம் எம்.பி.  கூட்டத்தில் உரையாற்றிய ஆர். சச்சிதானந்தம் எம்.பி., திண்டுக்கல்லில் உள்ள பஞ்சாலைகள் நெருக்கடிக்கு, மோடியின் தவறான பொருளாதாரக் கொள்கையே காரணம் என்றார். காட்டன் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (CCI) கொள்முதல் செய்வதி லிருந்து விலகியதால், அதானியும் அம்பானியும் பருத்தியை நினைத்த  விலைக்கு விற்று லாபம் அடைகின்ற னர். டிரம்ப் வரிவிதிப்பால் (50% வரி), இங்கு உற்பத்தியாகும் ஜவுளி வர்த்தகம் பாதிக்கப்பட்டு, பஞ்சாலைகளில் வாரத்தில் 2 நாள் கட்டாய விடுமுறை விடப்படுகிறது என்றும், இந்த வன் முறையை எதிர்த்துப் பேசத் திராணியற்ற பிரதமராக மோடி இருக்கிறார் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.  இக்கூட்டத்திற்கு வேடசந்தூர் சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஜி. கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். செந்தொண்டர் கன்வீனர் கே.ஆர். பாலாஜி, மாவட்டக்குழு உறுப்பினர் சி.பாலச்சந்திரபோஸ், ஒன்றியச் செய லாளர்கள் ஜெயபால், மலைச்சாமி ஆகி யோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே. சாமுவேல்ராஜ், மாவட்டச் செயலாளர் கே. பிரபாகரன், மாநிலக் குழு உறுப்பினர் ஜி. ராணி உட்படப் பல தலைவர்களும் இதில் கலந்துகொண்டு உரையாற்றினர்.