tamilnadu

img

கொடிகாத்த குமரன் நினைவுநாள் அனுசரிப்பு

ஈரோடு, ஜன. 11- சுதந்திர போராட்ட தியாகி கொடிகாத்த குமரன் நினைவு நாள் சிவகிரியில் அனுசரிக்கப்பட்டது. சுதந்திரப் போராட்ட தியாகி கொடிகாத்த குமரன் நினைவு  நாள், ஈரோடு, சிவகிரியில் சனியன்று அனுசரிக்கப்பட்டது.  இதில், சிவகிரி பேரூராட்சித் தலைவர் பிரதிபா, மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் கோபி தாலுகாச் செயலாளர் எம்.சசி,  தியாகி குமரன் பேரவை நிர்வாகி பாலசுப்ரமணியம்,  இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டப் பொருளாளர்  லோகநாதன், சிபிஐ நகரச் செயலாளர் மணிவண்ணன், மணி முத்து, திராவிடர் கழகம் சண்முகம், தாண்டாபாளையம்  வஜ்ரவேல், காமாட்சி அம்மன் திருக்கோவில் அறங்காவலர்  குழுத் தலைவர் பிரகலாதன் உள்ளிட்ட திரளானோர் பங் கேற்று தியாகி குமரன் உருவ சிலைக்கு மாலை அணிவித்து  மரியாதை செலுத்தினர்.