tamilnadu

img

குழந்தைகள் பூங்கா - விண்வெளி பற்றி குழந்தைகளின் ஓவியங்கள்

 விண்வெளி பயணக் கனவு பற்றிய ஓவியங்கள் சேகரிப்பு மற்றும் விண்வெளி பயணத்துக்கான கேள்வி-பதில் நிகழ்ச்சி ஒன்று சீனாவில் ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சீன மற்றும் வெளிநாட்டு குழந்தைகளுக்கு, சீன விண்வெளி நிலையத்தில் பணிபுரியும் சீன விண்வெளி வீரர்கள் மூவர் சீன ஊடகக் குழுமத்தின் மூலம் காணொளி வழியில் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். விண்வெளி வீரர் ச்சென் டுங்: சீன மத்திய ஊடகக் குழுமம், சீன அறிவியல் தொழில் நுட்ப அருங்காட்சியகம் ஆகியவை, விண்வெளி கனவை வரைதல் என்ற ஓவியப் போட்டி உள்ளிட்ட நடவடிக்கைகளை கூட்டாக நடத்தின. இந்த ஓவியப் படைப்புகள், கற்பனை திறன் மிக்கதாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தன என்றார். விண்வெளி வீரர் லியு யாங்: இவற்றிலிருந்து விண்வெளி மீது அவர்களின் ஆர்வம் மற்றும் எதிர்பார்ப்பை உணர்ந்து கொள்கிறோம் என்று கூறினார். விண்வெளி வீரர் சாய் ஷு ச்செ: எங்கள் விண்வெளி வாழ்க்கை குறித்து அனைவரும் அறிய ஆவலாக இருக்கின்றனர். விண்வெளி நிலையத்தில் இருந்த போது, நாங்கள் தரையில் இருந்ததைப் போல பணிபுரிந்து ஓய்வு எடுக்கிறோம் என்று தெரிவித்தார். விண்வெளி வீரர் ச்சென் டுங்: விண்வெளி, மனித குலத்தின் பொது தாயகம் என்றார். நிறைவாக அவர்கள், குழந்தைகள் அனைவரும் விருந்தினராக சீன விண்வெளி நிலையத்துக்கு வாங்க என்றும் அவர்கள் உலகளவில் இளம் வயதினர்களுக்கு அழைப்பு விடுத்தனர். சீன ஊடக குழுமத்தின் ஆசிய-ஆப்பிரிக்க மொழிகளிலான நிகழ்ச்சிகள் மையம் சீன அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அருங்காட்சியகத்துடன் இணைந்து இந்நிகழ்ச்சியை நடத்தியது. இந்நிகழ்ச்சிக்குப் பிறகு, 20க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 600க்கும் அதிகமான ஓவிய படைப்புகளும், ஆயிரத்துக்கும் அதிகமான கேள்விகளும் சேகரிக்கப்பட்டுள்ளன.  விண்வெளி வாழ்க்கை, விண்வெளி பயணம், பிற கிரகங்களின் நாகரிகம், விண்வெளியின் அமைதியான பயன்பாடு, சிறந்த வீட்டுக் கட்டுமானம் ஆகியவற்றின் மீதான அவர்களின் ஏராளமான எண்ணங்களை இந்த ஓவியங்கள் வெளிப்படுத்துகின்றன.