மகாத்மா காந்தியடிகளின் 78-ஆவது நினைவு நாளையொட்டி சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் உள்ள காந்தியடிகளின் உருவச் சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் பொன்முடி, மா. சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு, மக்களவை உறுப்பினர் ஆ. ராசா உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதனைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியும் ஏற்கப்பட்டது.