உள்ளாட்சியில் காலியாக உள்ள பதவிகளுக்கு இடைத்தேர்தல்!
மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு
உள்ளாட்சி அமைப்பு களில் காலியாக உள்ள 448 உறுப்பினர் பதவிகளுக்கு வரும் மே மாதம் தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறி வித்துள்ளது. இதுகுறித்து மாநில தேர் தல் ஆணையம் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட் டுள்ளது. அதில், “ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தற்போது காலியாக உள்ள பதவி யிடங்களுக்கு தற்செயல் மற்றும் இடைக்கால தேர் தல்களை நடத்த ஆயத்த நட வடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சி யில் 4 வார்டு கவுன்சிலர் களுக்கான காலிப்பதவியி டங்கள் உட்பட 35 மாவட்டங் களில் உள்ள நகர்ப்புற உள் ளாட்சி அமைப்புகளில் 133 காலிப் பதவியிடங்கள் ஏற் பட்டுள்ளன. மேலும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப் பத்தூர், விழுப்புரம், கள் ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளில் 315 காலிப்பதவியிடங்கள் ஏற் பட்டுள்ளன. இப்பதவியி டங்களுக்கு வரும் மே மாதம் தேர்தல் நடத்த உத்தேசிக் கப்பட்டுள்ளது.” என்று தெரி வித்துள்ளது.