மூச்சுக் காற்று!
நல்ல நல்ல நூல்களை நாமும் வாங்கிப் படிக்கலாம்! இல்லந் தோறும் நூலகம் இனிமை யாகப் படைக்கலாம்! நூல்கள் இல்லா வீட்டிலே நுழையா அறிவுச் செல்வமே! ஆல்போல் தழைத்து வளர்ந்திட அறிவை வளர்க்கும் நூல்களே! நாளும் நல்ல நூல்களை நாமும் எடுத்துப் படிக்கலாம் மேலும் மேலும் அறிவினை மேன்மை யாக வளர்க்கலாம்! உயிரும் வாழ சுவாசிப்போம் உயர்வும் காண வாசிப்போம்! பயிலப் பயில வளம்சேரும் பஞ்சம் இன்றி அறிவூறும்! சிந்தனை ஆற்றல் பெருக்கிடும் செயலினைச் செய்ய உதவிடும்! முந்தியே செல்ல வைத்திடும் மூச்சுக் காற்றாய்ப் பயன்தரும்!
