சென்னை,ஜன.30- தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை வியாழனன்று சென்னையில் செய்தியா ளர்களிடம் கூறியதாவது: ஒன்றிய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருவதாக கேள்விப்பட்டோம். அவர் வருகைக்கு எதிர்ப்பு தெரி வித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும். ஏனென்றால், நேரு உற்ற தோழனாக, உறுதுணை யாக இருந்த அம்பேத்கரை, தனது கருத்துகளால் இழிவு படுத்தி பேசிய அமித் ஷாவை கண்டித்து இந்த போராட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.