திருவனந்தபுரம், அக்.1- குழந்தைகள் பாடப்புத்தகங்க ளுக்கு முன்பு சுற்றுச்சூழல் மற்றும் இயற்கையிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். பாலர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள அகில இந்திய பயிலரங்கின் இரண் டாம் நாளான வெள்ளியன்று (செப். 30) குழந்தைகளுடன் முதல்வர் உரையாடினார். “இத்திரிப்பூவே சிவந்நபூவே, இத்தரநாளும் நீயெங் போயி? மண்ணினடியில் ஒளிச்சி ருந்நோ? மற்றுள்ள பூக்களெ காத்தி ருந்நோ? (சின்னப் பூவே சிவந்த பூவே இத்தனை நாளும் நீ எங்கே சென் றாய்? மண்ணுக்கு கீழே ஒளிந்திருந் தாயோ? மற்ற பூக்களுக்காக காத்தி ருந்தாயோ?) என்கிற கவிதையைச் சொல்லி, நம்மால் மற்றவர்களுக் காகவும் வாழவும், அவர்களுக்காக அக்கறை கொள்ளவும் முடியும் என குழந்தைகளிடம் குறிப்பிட்டார். குழந்தைப் பருவத்தில் நாம் கற்றுக் கொள்ளும் குட்டிக் கவிதை கள் நம் வாழ்க்கையையும் வழிகளை யும் வடிவமைப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. அதனால்தான் எப் போதும் கண்களைத் திறந்து வைத்தி ருக்க வேண்டும் என்று கூறுவது உண்டு. சமூகத்தில் என்ன நடக்கி றது என்பதை அறிந்து குழந்தைகள் வளர வேண்டும். அநீதிக்கு எதிராக வும், அடக்குமுறைக்கு எதிராகவும் போராடக்கூடியவராக இருக்க வேண்டும் என்றார்.
இன்றும் பள்ளி செல்ல முடியாத குழந்தைகள் நம்மிடையே உள்ள னர். ஒவ்வொரு நாளையும் கடந்து செல்ல துயரப்படுகிறவர்களும், அநீதியை எதிர்கொள்பவர்களும் இருக்கிறார்கள். பாலர் சங்க செயற் பாட்டாளர் என்கிற நிலையில் நாம் அவர்களைக் கண்டறிந்து அவர் களுக்காக வேலை செய்ய முயற்சிக்க வேண்டும். சமூக மற்றும் பொருளா தார வளர்ச்சிக்கான முக்கிய வழி கல்வி என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
கொரோனா பெருந்தொற்று நோய்களின் போது குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க அனைத்து குழந்தைகளுக்கும் டிஜிட் டல் சாதனங்கள் மற்றும் இணைய அணுகலை கேரளா உறுதி செய்தது. இணையம் என்பது அனைவரின் உரிமை என்பதை உணர்ந்த கேரளா வும் கே போன் திட்டத்தை தொடங்கி யுள்ளது. கொரோனா காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகளின் பெயரில், வங்கிக் கணக்கில் ரூ.3 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டு, 18 வயது வரை மாதந்தோறும் ரூ.2000 வழங்கப்படுகிறது. தற்போது குழந் தைகள் மத்தியில் போதைப் பொருள் பயன்பாட்டை ஒழிக்கும் நட வடிக்கைகளில் மாநில அரசே முன் னின்று செயல்படுகிறது என்றார். விழாவிற்கு எம்.பிரகாசன் தலைமை வகித்தார். சிபிஎம் அரசி யல் தலைமைக்குழு உறுப்பினர் எம்.ஏ.பேபி, மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் டி.பி.ராமகிருஷ் ணன், ஆனாவூர் நாகப்பன், சட்ட மன்ற உறுப்பினர்கள் வி.ஜாய், எம். விஜின், இந்திய மாணவர் சங்க அகில இந்திய தலைவர் வி.பி.சானு, திரு வனந்தபுரம் மேயர் ஆர்யா ராஜேந்தி ரன், சிந்தா ஜெரோம், டி.கே.நாராய ணதாஸ், கே.வி.ஷில்பா, ஆதில் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர். குழந் தைகளின் கேள்விகளுக்கு பதில ளித்துவிட்டு, அவர்களுடன் புகைப் படம் எடுத்துக்கொண்டு முதல்வர் திரும்பினார்.