tamilnadu

img

ஆண் கொசுக்களும் ரத்தம் குடிக்கும் - சிதம்பரம் ரவிச்சந்திரன்

ஆண் கொசுக்களும் ரத்தம் குடிக்கும்

 

ஆண் கொசுக்களும் இரத்தம் குடிக்கும். சில குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் பெண் கொசுக்கள் போல அவை இரத்த தாகம் பிடித்தவை. பொதுவாக அவை தாவர சாற்றையும் தேனையும் மட்டுமே குடித்து வாழ்பவை. மனிதர்களுக்கு தொல்லை தருவதில்லை. ரீங்காரமிடும் முனகல் பாட்டு இல்லை. கடித்தொல்லையும் இல்லை என்று இதுவரை கருதப்பட்டுவந்தது. பெண் கொசுக்கள் மட்டுமே மனிதர்களை கடிக்கின்றன. இரத்தத்தை குடிக்கின்றன. நோய்களை பரப்புகின்றன என்று இதுநாள் வரை கருதப்பட்டது. “இது தவறு என்று புதிய ஆய்வு கூறுகிறது. சில சந்தர்ப்பங்களில் ஆண் கொசுக்கள் கடிக்கின்றன. நோய்களை பரப்புகின்றன என்று இந்த ஆய்வு எடுத்துக்  காட்டுகிறது. “பொதுவாக கியூலெக்ஸ் டாசாலிஸ் (Culex tarsalis), ஈட்ஸ் எஜிப்டி(Aedes aegypti) போன்ற இனங்களை சேர்ந்த ஆண் கொசுக்கள் மனித இரத்தம் குடிப்பதில் ஆர்வம் இல்லாதவை. ஆனால் வளி மண்டல ஈரப்பதம் குறைவாக இருக்கும் போது, அவற்றின் உடலில் சர்க்கரை சத்து குறைந்த அளவில் உள்ள போது அவை மனித ரத்தத்தை குடிக்கின்றன” என்று பென்சில்வேனியா பல்கலைக்கழக பூச்சியியல் துறை ஆய்வு மாணவர் ஜேசன் ராஸ்கான் (Jason Rasgon) கூறுகிறார். இதுபற்றிய ஆய்வுக் கட்டுரை பயோ ஆஸிஃப் (bioaxiv.org) என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது. வளி மண்டல ஈரப்பதத்தை குறைத்து ஆண் கொசுக் களுக்கு தாவரச் சாறு கிடைக்காமல் செய்யப்பட்டது. மெல்லிய செயற்கை சவ்வின் வழியாக ரத்தம் கொடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. அப்போது அவை மனித ரத்தத்தை குடித்தன. ஆண் கொசுக்கள் வைக்கப்பட்டிருந்த கூண்டில் தன் கைகளை விட்டு ராஸ்கான் ஆராய்ந்தார். உடலில்  போதிய அளவு நீர்ச்சத்து இருந்த பெரும்பாலான கொசுக்கள் அவரை கடிக்கவில்லை. ஆனால் நீர்ச்சத்து  இல்லாதவை அவருடைய தோலில் அமர்ந்து இரத்தம்  குடித்தன. நீண்ட குழாய் போன்ற வாய்ப் பகுதி ரத்தம் குடிக்க  ஆண் கொசுக்களுக்கு பயன்படுவதில்லை. ஆனால் செல்லப் பிராணி ஜிஜி (Jiji) என்ற பூனை யால் ஆய்வாளரின் கையில் இருந்த தோலில் ஏற்பட்ட  சிறிய காயத்தின் மூலம் அவை ரத்தம் குடித்தன. மற்றொரு ஆய்வில் எஜிப்ட்டி ஆண் கொசுக்கள் வளி  மண்டல ஈரப்பதத்தை உணர முடியாத வகையில் மரபணு மாற்றம் செய்யப்பட்டு ஆராயப்பட்டபோது ரத்தம் குடிக்கவில்லை என்று கண்டறியப்பட்டது. ஆண்  கொசுக்கள் தாகத்தை தணிக்க ரத்தம் குடிக்கின்றன என்று இந்த ஆய்வில் இருந்து தெரியவந்தது.

காயத்தின் வழியே ரத்தம் குடிக்கும்  ஆண் கொசுக்கள்

ஆண் கியூலெக்ஸ் கிவின்கியூபேஸியாட்டஸ் (Culex Quinquefasciatus) கொசுக்களுக்கு மனித ரத்தம் நஞ்சாகிறது என்று முந்தைய ஆய்வு ஒன்று கூறியது. இதனால் எல்லா ஆண் கொசுக்களுக்கும் மனித ரத்தத்தை செரிக்கும் ஆற்றல் இல்லை என்று விஞ்ஞானிகள் கருதினர். ஆனால் இந்த ஆய்வின் மூலம் ரத்தம் குடிக்காத சி.டார்சாலிஸ் (C.Tarsalis) கொசுக்கள் போலவே ரத்தம் குடித்தவையும் அதே  ஆயுள் காலத்துக்கு உயிர் வாழ்ந்தன என்று கண்டறி யப்பட்டது. இயற்கையில் ஆண் எஜிப்டி கொசுக்கள் மஞ்சள் காய்ச்சல், சிக்கா (Zika)வைரஸ், சிக்குன்குனியா, டெங்கு காய்ச்சல் போன்றவற்றை பரப்புகின்றன. ஆனால் சி.டார்சாலிஸ் இனத்தின் பெண் கொசுக்கல் வெஸ்ட் நைல் ( West Nile), செயிண்ட் லூயி என்செபாலிடிஸ் (St. Louis encephalitis) மற்றும்  இவற்றுடன் தொடர்புடைய நோய்களை பரப்பு கின்றன. இந்த இனத்தின் ஆண் கொசுக்கள் வெஸ்ட்நைல் வைரஸால் பாதிக்கப்படுகின்றன.  இவற்றின் உமிழ்நீரில் பெண் கொசுக்களில் உண்டா வது போன்ற நோய்த் தொற்று ஏற்படுகிறது. வருங் காலத்தில் அரிதாக ஆண் கொசுக்களும் வைரஸ் போன்ற நோய்களை பரப்புகின்றனவா என்பது பற்றி  மேலும் தீவிரமாக ஆராயவேண்டும் என்று விஞ்ஞானி கள் கருதுகின்றனர்.

மனிதக் குரல்களை அடையாளம் கண்டுகொள்ளும் விலங்குகள்

 

புலிகள் முதல் சிறுத்தைகள் வரை பூனைக் குடும்பத்தை சேர்ந்த பெரிய விலங்குகள் பார்க்க கம்பீரமான தோற்றத்துடன் தனித்து வாழ்கின்றன. பொருத்தமற்ற விலங்குகளை தங்கள் சமூக வாழ்வில் இருந்து விலக்கிவைத்து இவை வாழ்கின்றன என்றாலும் இவற்றிற்கு நன்கு பழக்கமான மற்றும் பழக்கமில்லாத குரல்களை அவை புரிந்துகொள்கின்றன என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பூனை வகை உயிரினங்கள் நட்பற்  றவை என்று பொதுவாக சித்தரிக்கப் பட்டாலும் வீட்டில் செல்லமாக வளர்க் கப்படும் இவ்வகை உயிரினங்கள் தங்  கள் உரிமையாளரின் குரலை மற்றவர்  குரலில் இருந்து வேறுபடுத்தி புரிந்து கொள்கின்றன என்று முந்தைய ஆய்வு  கூறியது. புலிகள், சிறுத்தை புலிகள், கூகர்கள் (Cougars) என்னும் ஒரு வகை சிங்கங்கள் போன்ற பூனைகளின் கவர்ச்சியான சொந்தங்கள் வித்தியாச மான குரல்களை கேட்டு பகுத்து அறி கின்றன. இந்த பண்பு பாதுகாக்கப்பட்ட சூழ லில் வாழும் விலங்குகளிடம் காணப்படு கிறது. “காட்டில் வாழும் இது போன்ற  வன உயிரினங்கள் சொந்த குழந்தை களை அடையாளம் காண, சுற்றுப்புறத்  தில் இருக்கும் மற்ற உயிரினங்களை பற்றி அறிய இப்பண்பு அவற்றிற்கு உதவு கிறது. இத்திறன் மற்றவற்றிடம் இருந்து வரும் எச்சரிக்கை அழைப்புகளை கவ னித்து தங்களை பாதுகாத்துக் கொள்ள  அவற்றிற்கு உதவுகிறது.

சமூக வாழ்வு என்பது குழுவாக வாழ்வது மட்டும் இல்லை. அறிவாற்ற லுக்கு மட்டுமே குழுவாக வாழ்தல் முக்கி யம்” என்று மிஷிகன் ராச்செஸ்ட்டர் (Rochester) ஆக்லாந்து பல்கலைக்  கழக ஆய்வாளரும் ஆய்வுக்கட்டுரை யின் இணை ஆசிரியருமான பேராசி ரியர் ஜெனிஃபர் வாங்க் (Prof Jennifer Vonk) கூறுகிறார். இது பற்றிய ஆய்வுக்கட்டுரை பியர் ஜே (PeerJ) என்ற இதழில் வெளிவந்துள்ளது. விலங்குக் காட்சி சாலைகள், சர ணாலயங்கள், இயற்கை பாதுகாப்ப கங்கள் போன்ற இடங்களில் பாதுகாக்  கப்பட்ட சூழ்நிலையில் பராமரிக்கப் படும் சிங்கங்கள், மேகப் புலிகள், பனிச்  சிறுத்தைகள், சர்வல்ஸ் (Servals) என்னும் கவர்ச்சியான பூனை இன  உயிரினங்கள் எவ்வாறு ஆரா யப்பட்டது என்பதை ஆய்வுக்கட்டுரை விவரிக்கிறது. ஐந்து இனங்களைச் சேர்ந்த ஏழு பூனை வகை உயிரினங்கள் முதலில் ஆராயப்பட்டன. பிறகு பத்து இனங்களைச் சேர்ந்த 24 பூனை வகை உயிரினங்கள் ஆராயப்பட்டன. இதில் 16 உயிரினங்கள் மனிதரால் வளர்க்கப்பட்டவை. 8 உயிரினங்கள் அவற்றின் தாயால் வளர்க்கப்பட்டவை. ஒவ்வொரு பூனையும் “Goodmorning how are  You doing today?” போன்ற ஒரே மாதிரி  வாக்கியங்கள் கொண்ட மூன்று முன்பின் பழக்கம் இல்லாத மனி தர்களின் குரல் பதிவுகளை கேட்கும்படி செய்யப்பட்டது.

பதில் வினைகள்

பிறகு அந்தந்த விலங்கை பராமரிப்ப வர் போன்றவர்களின் பழக்கமான குரல்கள் பேசும் இதே வாக்கியங்களை கொண்ட நான்காவது பதிவு போட்டு காட்டப்பட்டது. ஐந்தாவது கடைசி பதிவு  பழக்கமான குரலை உடையது. மீண்டும் மீண்டும் நடந்த இந்த செயல்முறை இதே மனிதர்கள் விலங்கின் பெயரை சொல்லி அழைக்கும் பதிவுடன் சேர்த்து போட்டுக்காட்டப்பட்டது. ஒவ்வொரு பதிவிற்கும் கருத்தூன் றிய பார்வை, தலை அசைவுகள், ஒலியை நோக்கி அல்லது ஒலியில் இருந்து விலகிச்செல்லும் பண்பு, சீரான ஒலி அல்லது உறுமுதல் போன்ற பேச்சு  சத்தங்களுக்கு விலங்குகளின் பதில் வினைகள், நடத்தைப்பண்புகள் பகுப்பாய்வு செய்யப்பட்டது. பழக்க மில்லாத குரல்களை விட கேட்டு பழக்கப்பட்ட மனித குரலுக்கு விலங்கு கள் வேகமாகவும் நீண்ட நேரமும் தீவிர மாகவும் பதில் வினை புரிந்தன. இந்த பண்பு அவை ஆணா அல்லது  பெண்ணா அல்லது அவை மனி தர்களால் அல்லது தாயால் வளர்க்கப்  பட்டவையா என்பதை பொறுத்து அமையவில்லை என்று ஆய்வு கூறுகிறது. பெரிய சமூக குழுவாக வாழும் சிங்கங்களில் இந்த பகுப்பாய்வு செய்யப்படவில்லை. உயிரி னங்களின் பெயர்கள் சொல்லப்பட்டா லும் சொல்லாமல் விடப்பட்டாலும் முடிவுகளில் பெரிய வேறுபாடு ஏற்பட வில்லை.

மனிதக் குரல்களை அடிக்கடி கேட்டு பழக்கப்பட்டதால் குரல்களை அடையாளம் கண்டு பதில் வினை புரியும் பண்பு வீட்டில் வளர்க்கப்படும் இந்த வகை விலங்குகளிடம் மட்டும்  இல்லாமல் வனங்களில் வாழ்பவற்றி லும் காணப்படுகிறது. வெவ்வேறு இன  உயிரினங்களிடம் இது நடத்தப்பட வில்லை என்பதால் இது பற்றிய ஆய்வு  மேலும் தீவிரமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறு கின்றனர். தங்களை பராமரிப்பவர் யார் என்  பதை வன வாழ் விலங்குகளும் தெரிந்து வைத்திருக்கின்றன. இந்த வகை விலங்குகளின் குரல்களை அடையா ளம் காணும் அற்புதப் பண்பு அவற்றின்  அறிவாற்றல் மற்றும் புரிதலை எடுத்துக்காட்டுகிறது என்று ஆய்வா ளர்கள் வலியுறுத்துகின்றனர்.