tamilnadu

img

அம்பேத்கரை அவமதித்த அமித் ஷாவே பதவி விலகு! இடதுசாரிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்

அண்ணல் அம்பேத்கரை அவமதித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வலியுறுத்தி சிபிஎம், சிபிஐ, சிபிஐ(எம்எல் ) லிபரேசன் ஆகிய இடதுசாரிக் கட்சிகள் சார்பில் திங்களன்று தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆர்.செல்லசுவாமி தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.லீமாறோஸ், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஏ.வி.பெல்லார்மின், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அகமது உசேன், சிபிஐ மாவட்டச் செயலாளர் சுபாஷ் சந்திர போஸ், சிபிஐ(எம்எல்) மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.அந்தோணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திருநெல்வேலி சந்திப்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் மாவட்டச் செயலாளர் க.ஸ்ரீராம் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் கே.ஜி.பாஸ்கரன், சிபிஐ மாவட்டச் செயலாளர் சடையப்பன், சிபிஐ(எம்எல்) மாவட்டச் செயலாளர் சுந்தர்ராஜன், மாநில நிலைக்குழு உறுப்பினர் ரமேஷ், ஏஐடியுசி மாநிலத் தலைவர் காசி விஸ்வநாதன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.