விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய மாற்று நடவடிக்கை தேவை! தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை
சென்னை, பிப்.27 - விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை கொள்முதல் செய்வதற்கு, நேரடி நெல் கொள் முதல் நிலையங்களில் மாற்று நடவடிக்கை களை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. இதுதொடர்பாக சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் சாமி.நடராஜன் விடுத் துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா மற்றும் தாளடி நெல் அறுவடைப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மாநிலம் முழுவதும் நெல் அறுவடை நடை பெற்று வரும் நிலையில், அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவ சாயிகள் கொண்டு செல்லும் நெல்லை கொள்முதல் செய்வதற்கு கிராம நிர்வாக அலுவலரின் சாகுபடி சான்று மற்றும் சிட்டா அடங்கல் கையெழுத்திட்டு தர வேண்டும். மேற்படி சான்றுகளை பெற்றுக் கொண்டு தான் கொள்முதல் நிலைய ஊழியர்கள் சம்பந்தப்பட்ட விவசாயியின் சான்றுகளை கணினியில் பதிவேற்றி அதன் OTP எண் சம்பந்தப்பட்ட விவசாயியின் கைப்பேசிக்கு வரும். அதன் பிறகே நெல் கொள்முதல் செய்யும் நடைமுறை உள்ளது. கடந்த சில நாட்களாக வருவாய்த் துறை ஊழியர்கள் அவர்களின் பல்வேறு கோரிக் கைகளை முன்வைத்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், விவ சாயிகள் சான்று பெற முடியாமல் அறுவடை செய்த நெல்லை கொள்முதல் நிலையங்களில் விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மாநில அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை கொள்முதல் செய்வதற்கு மாற்று நடவடிக்கைகளை மேற்கொண்டு அனைத்து விவசாயிகளின் நெல்லையும் கொள்முதல் செய்வதற்கு உடனே நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வலியுறுத்து கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.