tamilnadu

img

தோழர் வைரமுத்துவின் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு நிதி வாலிபர் சங்க அகில இந்திய தலைவர் ஏ.ஏ.ரஹீம் எம்.பி., வழங்கினார்

தோழர் வைரமுத்துவின் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு நிதி  வாலிபர் சங்க  அகில இந்திய தலைவர் ஏ.ஏ.ரஹீம் எம்.பி., வழங்கினார்

மயிலாடுதுறை, டிச.25- மயிலாடுதுறை அடியாமங்கலம் பெரிய தெருவைச் சேர்ந்தவர் வைர முத்து (28). இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் ஒன்றிய துணைத் தலைவரான இவர், இருசக்கர  மெக்கா னிக் பணி செய்து வந்தார். அதே பகு தியின் காலனித் தெருவைச் சேர்ந்த  குமார் மகள் மாலினி (26).  வைரமுத்து - மாலினி இருவரும் 10 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் பட்டியலின சமுதாயத்தை சேர்ந்த வர்கள் என்றாலும், மாலினியின் தாய் செட்டியார் சமூகத்தை சேர்ந்தவர் ஆவார்.  மாலினியின் காதலுக்கு அவரது  தாய் விஜயா தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வந்ததோடு வைரமுத்து வுக்கு நேரில் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதனால் இரு  குடும்பத்தினரிடையே பிரச்சனை நிலவி வந்துள்ளது. இதுதொடர்பாக காவல்துறையிடம் புகார் அளிக்கப் பட்டதன் பேரில் இருதரப்பினரையும் அழைத்து விசாரித்தபோது, வைர முத்துவை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக மாலினி உறுதிபட தெரி வித்துள்ளார். இதையடுத்து மாலினி யின் குடும்பத்தினர் அவரிடம் எழுத்துப் பூர்வமான உறுதியை பெற்றுக் கொண்டு அவரை புறக்கணித்து சென்று விட்டனர். மாலினி தனது உறவினர் வீட்டில் சில நாட்கள் இருந்துள்ளார்.  தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் பதிவுத் திருமணம் செய்வ தற்கான சான்றிதழ்களை எடுத்து வரு வதற்காக மாலினி சென்னை சென்றி ருக்கிறார். ஆனால் அன்றிரவு வைர முத்து பணிமுடிந்து வீடு திரும்பிய போது அடியாமங்கலத்தில் மர்ம கும்பல் அவரை வழிமறித்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியது. இதில் வைரமுத்து சாதி ஆணவ வெறிக்கு இரையானார். தொடர் போராட்டத்திற்கு பிறகே தகுந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டது.  இந்நிலையில், சாதி ஆணவப்படு கொலை செய்யப்பட்ட  தோழர் வைர முத்துவின் குடும்பத்திற்கு பாது காப்பு நிதி வழங்கும் நிகழ்ச்சி - பொதுக்கூட்டம் மயிலாடுதுறையில் புதனன்று நடைபெற்றது. வைர முத்துவை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்திற்கு உதவிடும் வகையில் மாநிலம் முழுவதும் இந்திய ஜனநா யக வாலிபர் சங்கம் நிதி சேகரித்த ரூ.5லட்சத்துக்கான குடும்ப நல பாது காப்பு நிதி காசோலையை அகில இந்திய தலைவரும், எம்.பி.யுமான ஏ.ஏ.ரஹீம் குடும்பத்தினரிடம் வழங்கி ஆறுதல் கூறி,  சிறப்புரையாற்றினார். அகில இந்திய துணைத்தலைவர் ஏ.வி.சிங்காரவேலன், மாநிலச் செய லாளர் எஸ்.கார்த்திக், மாநில பொரு ளாளர் டி.சந்துரு, மாநிலத் துணை  தலைவர் அபிராமி, மாநில செயற் குழு உறுப்பினர்கள் ஜி.அரவிந்த் வாமி, ஆனந்தி மற்றும் மாவட்ட செய லாளர்கள் அருளரசன் (தஞ்சை), ஆர். சேதுபதி (திருச்சி மாநகர்), எஸ்.அறி வழகன் (பெரம்பலூர்), ஆர்.மகாதீர் (புதுக்கோட்டை), பாலா (திருவா ரூர்), பாலகுமார் (திருச்சி புறநகர்), அருள்தாஸ் (நாகை), சின்னதம்பி (கட லூர்), குணா (கடலூர்) மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றினர். முன்னதாக “ஒரே சாதி! மனித சாதி!” என்கிற முழக்கத்தோடு டிஇஎல்சி பள்ளி அருகில் கீழ்வேளூர் தொகுதி மார்க்சிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி துவக்கி வைத்த பேரணி, கூறைநாடு காந்திஜி ரோடு வழியாக பொதுக்கூட்டம் நடைப்பெற்ற விஜயா திரையரங்கு அருகில் நிறைவடைந்தது. பேரணி பொதுக்கூட்டத்தில் ஏராளமான வாலிபர் சங்கத் தோழர்கள் கம்பீர முழக்கத்தோடு பங்கேற்றனர். நிறைவாக மயிலாடுதுறை மாவட்ட தலைவர் கவியரசன் நன்றி கூறினார்.