tamilnadu

img

காந்தளூர் கபடி வழக்கில் அனைவரும் விடுதலை

காந்தளூர் கபடி வழக்கில் அனைவரும் விடுதலை

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அடுத்த காந்தளூரில், கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த கபடி விளையாட்டின் போது, இரு சமூகத்தினருக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதனால் காவல்துறையினர், மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள தாழ்த்தப்பட்ட பெண்கள் மற்றும் அங்கிருந்தவர்கள் அனைவரையும் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், காவல் நிலையத்துக்குச் சென்று, அப்பாவி பெண்களை மீட்டு அழைத்து வந்தனர். இந்நிலையில், கலவரத்தில் ஈடுபட்டதாக 8 பெண்கள் உட்பட 24-க்கும் மேற்பட்டவர்கள் மீது கொலை முயற்சி வழக்கும், 60-க்கும் மேற்பட்ட நபர்கள் மீது ஆர்டிஓ வழக்கும் பதிந்து கைது செய்தனர். செசன்ஸ் கோர்ட்டில் நடந்த இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் சார்பில், மூத்த வழக்கறிஞர் தோழர். சு. முத்துகிருஷ்ணன் ஆஜராகி வாதிட்டார். இந்த வழக்கில் கடந்த 24-ஆம் தேதி அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். கடந்த 8 ஆண்டுகளாக இந்த வழக்கை வெற்றிகரமாக நடத்தி விடுதலை பெற்றுக் கொடுத்த மூத்த வழக்கறிஞர் தோழர் சு. முத்துகிருஷ்ணனுக்கு, வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரும், அவரது அலுவலகத்திற்குச் சென்று, மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.