தேசிய சாஃப்ட் டென்னிஸ் போட்டி ஓமலூர் மாணவி தங்கம் வென்று சாதனை
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் நடை பெற்ற 18 ஆவது தேசிய அளவிலான சப்-ஜூனியர் சாஃப்ட் டென் னிஸ் போட்டியில், ஓமலூ ரைச் சேர்ந்த மாணவி தனிகா தாயுமானவன் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ஓமலூர் பேரூராட்சி பகுதியில் உள்ள தனியார் சாஃப்ட் டென்னிஸ் அகாடமி மைதானத்தில் பயிற்சி பெற்று வந்த மாணவி தனிகா தாயுமானவன், தேசிய அளவிலான போட்டி யில் தமிழ்நாடு அணி சார்பில் பங்கேற்றார். நேற்று இரவு நடைபெற்ற பெண்கள் தனிநபர் பிரிவு இறுதிப் போட்டி யில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மஹெக் என்ற மாண வியை வீழ்த்தி முதலிடம் பிடித்தார். தேசிய அளவில் சாஃப்ட் டென்னிஸ் போட்டியில் தனி நபர் பிரிவில் தங்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்த தனிகாவிற்கு பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் ஓமலூர் பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.