பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்த L2-எம்புரான் திரைப்படத்திற்கு தடை விதிக்க கேரள உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.
L2-எம்புரான் திரைப்படத்தில், குஜராத் கலவரம் தொடர்பான இடம் பெற்றுள்ளதாகவும், இப்படத்தை தடை செய்ய வேண்டும் என கோரி பாஜக-வை சேர்ந்த வி.வி.விஜேஷ் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி சி.எஸ்.தியாஸ் முன்பு விசாரணைக்கு வந்தது.
விசாரணையின்போது, "எம்புரான் படத்தை நீங்கள் பார்த்தீர்களா? அதில் உங்களுக்கு ஆட்சேபணைக்குரிய விஷயம் என்ன இருக்கிறது? இந்த படத்திற்கு சென்சார் வாரியம் சான்று கொடுத்துள்ளதுதானே? எனக்கு உங்கள் மீது சந்தேகமாக இருக்கிறது. இந்த படத்தை பார்த்ததால் எந்த இடத்திலாவது வன்முறை நடந்ததாக ஏதாவது ஒரு புகாரை காட்டுங்கள் பார்ப்போம்" என மனுதாரரிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இதனை தொடர்ந்து, இந்த மனு விளம்பரத்திற்காக போடப்பட்டுள்ளது என கண்டித்த நீதிபதி, L2-எம்புரான் திரைப்படத்திற்கு தடை விதிக்க முடியாது என்று தெரிவித்தார்.
மேலும், கோடை விடுமுறைக்குப் பின் வழக்கு விசாரிக்கப்படும் என தெரிவித்தார்.