கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானின், சட்ட ஆலோசகராக இருந்து மூத்த வழக்கறிஞர் கே.ஜாஜு பாபு ராஜினாமா செய்துள்ளார்.
கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் சமீபத்தில் 9 பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதை அடுத்து, 9 துணை வேந்தர்கள் கேரள உயர் நீதிமன்றத்தை நாடினர். இந்த விவகாரத்தில் அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் விசாரணை முடியும் வரை எடுக்கக்கூடாது என உயர்நீதிமன்றம் நேற்று ஆளுநருக்கு அறிவுறுத்தியிருந்தது.
இதனைத் தொடர்ந்து, ஆளுநரின் சட்ட ஆலோசகராக இருந்து மூத்த வழக்கறிஞர் கே.ஜாஜு பாபு மற்றும் பல்கலைக்கழக வேந்தரின் நிலைக்குழு ஆலோசகரான விஜயலட்சுமி ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர்.
மூத்த வழக்கறிஞர் கே.ஜாஜு பாபு ஆளுநருக்கு அளித்த ராஜினாமா கடிதத்தில், "ராஜினாமா செய்வதற்கான காரணம் உங்களுக்கு நன்றாக தெரியும், இந்த பதவியிலிருந்து வெளியேறுவதற்கான நேரம் வந்துவிட்டது" என்று குறிப்பிட்டுள்ளார்.